பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சியாங் கே-வேடிக் படிக்கைகள் எழுதி வாங்கிக்கொண் டிருந்தன. 1840-இல் அபினி யுத்தத்தில் சீனவின் தோல்வியால், ஐந்து துறைமுகங்களும் ஹாங்காங்கும் இழக்கப் பட்டன. 1860-இல் ஆங்கில-பிரெஞ்சுப் படைகள் பெகிங் நகரைத் தாக்கிக் கொள்ளேயடித்து இரண்டு உடன்படிக்கைகளைப் பெற்றன. குவாங்-ஸு சக்கர வர்த்தி காலத்தில், 1895-இல் ஜப்பால்ை சீன தோற் கடிக்கப்பட்டு, போர்மோஸா, கொரியா முதலியவை பறிக்கப்பட்டன. 1900-இல் பாக்ஸர் கலகத்தில், பிரிட்டன், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்டிரியா, இத்தாலி ஆகிய எல்லா காடுகளும் ஒன்று சேர்ந்து சீனவை முறியடித்தன. இவையெல்லாம் ஏற்கனவே ஊழலாக இருந்த மஞ்சு ஆட்சியை நாடு முழுதும் துவேஷிக்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டன. இதனுல் ஆட்சியையே ஒழிக்கும் முறையில் புரட்சிப் பிரசாரம் செய்வதற்கு வசதி ஏற்பட்டது. டாக்டர் பென் சரித்திரங்களே நன்கு கற்றவர்; சீனவில் முன்னல் புரட்சியில்ை பல ராஜ வம்சங்கள் கவிழ்க்கப்பட்டிருந்தன என்பதையும், பிரான்ஸில் புரட்சி கடந்து ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு எத்தனையோ கன்மைகள் ஏற்பட்டன என்பதையும் அவர் அறிவார். புரட்சியாலேயே சுதந்திரமும், சுதக் திரத்தாலேயே முன்னேற்றமும் ஏற்படும் என்று அவர் தீர்மானித்தார். ஒரு தேசத்தில் கிகரிலாது முக்கியத்துவம் வாய்ந்த இனம், மக்கள் இனமே" என்று 2,800 வருஷங்களுக்கு முன்பே சீன முனி மென் ஷியஸ் கூறியிருந்த அருள்வாக்கு அவர் உள் ளத்தில் பதிந்திருந்தது. ஆகவே, தம்முடைய வைத்திய வேலையைக் கைவிட்டு விட்டு, தேசப் புணருத்தாரணத்திற்காக அவர் புரட்சித் தலைவராக ம்ாறிவிட்டார். பல நண்பர்கள் திரிகரண சுத்தியுடன் அவருக்குத் துணையாக முன் வங்தனர்.