பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸன் யாட்-லென் 87 ருண்டுகளாகவே தேசிய உணர்ச்சியில்லாமல் இருங் ததைச் சரித்திர பூர்வமாக எடுத்துக்காட்டி, தேசிய உணர்ச்சியே தேசத்தை அங்கியர்களிடமிருந்து பாதுகாக்கும் என்று அவர் விளக்கியிருக்கிரு.ர். உலகமெல்லாம் ஒன்முகி வரவேண்டிய காலத்தில் தேசியம் என்னும் குறுகிய தத்துவத்தைப் பிரசாரம் செய்யலாமா என்று சில சீன வாலிபர்கள் கேட்டார்கள். அதற்கு டாக்டர்டஸன் ஒர் உப மானத்தால் பதிலளித்திருக்கிரு.ர்......... ஹாங்காங் நகரில் ஒரு சீனக் கூலி இருந்தான். அவன் தோளில் ஒரு மூங்கில் கழியை வைத்துக்கொண்டு அதன் இரு முனேகளிலும் மூட்டைகளைக் கட்டித் துக்கிக் கொண்டு போவது வழக்கம். ஒரு சமயம் அவன் தன்னிடமிருந்த பத்து டாலரைக் கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கினன். அங்தச் சீட்டைப் பங்தோபஸ்தாக வைப்பதற்கு அவனுக்கு இடமில்லை. ஆதலால் அதைத் தன்னுடைய மூங்கில் தடிக்குள்ளே சுருட்டி வைத்துக்கொண்டான். பின்னல் லாட்டரி குலுக்கப்பட்டதில் அவனுடைய சீட்டிலுள்ள கம்ப ருக்கே முதல் பரிசு கிடைத்தது. அவன் சீட்டை மெதுவாக வெளியே எடுத்துக்கொண்டுபோய்க் காட்டி லட்சம் டாலரைப் பரிசாகப் பெற்ருன். உடனே அவன் பழைய மூங்கில் தடியைக் கடலில் எறிந்துவிட்டு, நல்ல வீடு கட்டிக்கொண்டு, கக வாழ்க்கை கடத்தலான்ை. அவன் கடலில் எறிந்த மூங்கில் தடிதான் தேசியம் என்று டாக்டர் உபமான மாகச் சுட்டிக் காட்டினர். தடி அற்பமான பொருளா யிருந்தாலும் அதன் உதவியால் பெரிய லாபம் கிடைத்தது. பெரிய லாபம் கிடைக்காமற் போயிருங் தாலோ, முன்போல் மூட்டை சுமக்க அது உதவியா யிருக்கும். ஆகவே பெரிய லாபம் கிடைக்கு முன்பே அதைத் துார எறிந்து விடலாகாது என்பது அவர் கருத்து.