பக்கம்:சீனத்தின் குரல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சீனத்தின் குரல்


மார்க்கத்தில் ஈடுபட்டவர்களைப் போல கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். இப்படி இந்த சீனத்தின் செல்வர்களை கண்டபடியெல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. ஏகப்ராபரமாய் எங்கும் நிறைந்திருந்த அபினிப் போதையின் திருவருள்.

எதற்கும் அடங்காத வீரன், யாராலும் கட்டுப் படுத்த முடியாத பிடிவாதக்காரன், எந்த ஆராய்ச்சியாலும் மனம் குழம்பிவிடாத சிந்தனையாளன், எந்த சிக்கலான பிரச்னையிலும் தடுமாறாத விவேகி, எந்த வாதத்தாலும் தோல்வி காணாத தர்க்கவாதி, எந்தப் படையெடுப்புக்கும் அஞ்சாத போர்வீரன், எழிலைத் தன் அறிவாற்றலால் அளந்து கவி புனையும் புலவன், சொல்லால் மக்களை சொக்கவைக்கும் சொற்செல்வன், எவராயினும் போதைக்கு அடிமைப்பட்டே தீரவேண்டும் என்ற உண்மையை சிலா சாசனமாக்கிவிட்டது சீனம்.

சோம்பல் தேங்கிய முகத்தினராய், சுறுசுறுப்புக்குப் பகைவர்களாய், கவலையற்ற மனத்தினராய், கடமைக்கு விரோதிகளாய், நாகரிகத்தையும் மறந்து, நயவஞ்சகமும் அறியாமல் நிலையைத் தலைகீழாக்கும் மருந்து அபினி.

போதையிலே இரண்டு வகையுண்டு :--

ஒன்று: நரம்புகளின் வேகத்தைத் துரிதப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி எல்லா