பக்கம்:சீனத்தின் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

7


உறுப்புகளுக்கும் அதிர்ச்சியை யுண்டாக்கி உணர்வைப் போக்குவது.

மற்றொன்று: நாடிகளின். இயக்கத்தைத் தாமதப்படுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைத்து மனிதனை சாத்வீகத் துறையிலே கொண்டுபோய் விடுவது.

முன்னையது: அபார வீரத்தையும், அஞ்சாமையையும், முரட்டுத் தைரியத்தையும், பிடிவாத குணத்தையும் அதிகரிக்கச்செய்து மானாபிமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தலைகால் தெரியாமல் கூத்தாடும்படிச் செய்வது.

பின்னையத : அளவுகடந்த பொறுமையும். பய உணர்ச்சியும், பாப சிந்தையும், பரிதாப நிலையும் அடைந்து செயலற்றுக் கிடப்பது. சீன மக்கள் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாய் விட்டனர்.

பிரேமையினால் மனதையும், தியாகத்தினால் ஜெகத்தையும் ஆளமுடியும் என்ற அழியாத இலக்கியத்திற்கு சான்றாயிருந்த சீனம், மாற்றாரின் படையெடுப்புக்கு மௌனம் சாதிக்கவேண்டிய நிலையை யடைந்துவிட்டது, அமெரிக்காவின் சீதனச் சொத்தென நினைக்கப்பட்ட மேடம் ஷேக்கைக் கொண்டு, சீனத்தை அமெரிக்காவின் சாசனச் சொத்தாக்கலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த அமெரிக்க பணாதிபத்தி