பக்கம்:சீனத்தின் குரல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சீனத்தின் குரல்


யத்தின் பல்லைப் பிடுங்கி, ஷேக்கை பார்மோசா தீவில் பதுங்கவைத்து எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான நிலைமையடைந்துவிட்ட சீனம்.

அகில உலக அரியாசனத்தில், தனக்கும் ஓர் இடம் உண்டு என்ற அழியாத முத்திரையை இட்டு விட்ட செஞ்சீனத் தலைவனைத் தொழில் உலகம் வாழ்த்தி வரவேற்கிறது.

இரும்பால் வெல்ல முடியாது, எஃகுவால் அடக்க முடியாது, எண்ணற்றப் பீரங்கிப் படைகளால் கொல்ல முடியாது, மற்ற எந்த ஆயுத சக்தியாலும், அடிமைப்படுத்த முடியாது என்று பேராசை பிரிட்டாணியம் உணர்ந்த பிறகே மதியைக் குறைக்க மதுவைத் தருவது போல் சீனத்தன் அரசியலைக். கெடுக்க அபினியைத் தந்தது. ஒருகாலத்தில் பழமைக்குப் பிறப்பிடமாயிருந்த சீனத்தை பலர் ஈனத்தனமாகப் பேசவேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது அபினி போதை.

தடையுத்தரவு

சின்-யுவாள்-தீ என்ற மன்னன் தீக்கனல் கக்கினான். தடையுத்திரவை விதித்தான். பயனில்லை தீராப் பகைவர்களைப் போல் பகைத்துக் கொள்ளாமலே பக்குவமாக படுபாதாளப் படுகுழியை வெட்டி வைத்துவிட்டது அபினி. 'அயினி வேண்டாம்' "அபினி என் நாட்டுக்குள் வரவே கூடாது," என உறுதியான சட்டத்தைச் செய்தான். பலமான