பக்கம்:சீனத்தின் குரல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

5


அதிகரிக்க கண்களை மூடிக்கொண்டு கடைவாயில் எச்சில் வழிந்தோடுவது கூடத் தெரியாமல் தலையைக் கீழே தொங்கவிட்டுக்கொண்டு இருப்பான். யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள், என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்வதற்குண்டான சுய உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. நாட்கணக்காகத் தூங்குவார்கள். அரசாங்க அலுவலகங்கள், நீதிமன்றங்கள் பல நாட்கள் செயலற்றுக் கிடக்கும். ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமலே இருக்கும், வழக்கறிஞர்கள் வரமாட்டார்கள். நீதிபதிகள் இருப்பார்கள், குற்றவாளிகள் வரமாட்டார்கள். குற்றவாளிகள் வருவார்கள், நீதிபதிகள் வரமாட்டார்கள். கைதி சிறைக்கு வெளியே யிருப்பான், காவற்காரன் உள்ளே இருப்பான். கைதிகளின் சோற்றைக் காவற்காரன் உண்பான். காவற்காரன் தொப்பியைக் கைதி மாட்டிக்கொண்டு கைதட்டி சிரிப்பான். கைதிக்கு விலங்கு மாட்டுவதற்குப் பதில் காவற்காரன் கையில் கைதி விலங்கை மாட்டினாலும் மாட்டிவிடுவான். வண்டிக்கு முன்னால் குதிரையைப் பூட்டுவதால் பின்னால். பூட்டிவிட்டுத் தான் முன்னாலிருந்து வண்டியை இழுப்பதா என்ற சந்தேகம் வண்டிக்காரனுக்கு விந்து விடும் வக்கீல்களுக்கு முன்னால் சீட்ட புத்தகங்கள் விரிந்து கிடக்கும். ஆனால் வக்கீல்களுக்குப் பதில் குமாஸ்தாக்கள், அவைகளைப் படிப்பதுபோல் தங்கள் தலைகளை அவைகளில் மோதிக்கொண்டிருப்பார்கள். வக்கீல்கள் வேறோர் பக்கம் உட்கார்ந்துகொண்டு தங்கள் எதிரில் வழக்குக் கட்டுகளை வைத்துவிட்டு ஞான-