பக்கம்:சீனத்தின் குரல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சீனத்தின் குரல்


செல்லும் தலைவர்களும் காரணமாகின்றார்கள் என்பதை மிக விளக்கமாக நாம் தெரிந்து கொள்வதற்குண்டான வசதியை தேடித்தருகிறது சீனம். மற்ற நாடுகளிலே அதைத் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதும் உண்டு. ஏனெனில் தலைவர்கள் குற்றம் செய்துவிட்டு அதைத் தொண்டர்கள் மேல் சுமத்திவிட்டுத் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று காட்ட தொண்டர்களைக் காரணமில்லாமலே துரோகிகளென்று தூற்றுவார்கள். அப்பேற்பட்ட கள்ளமார்கெட் தலைவர்களுமுண்டு. தங்கள் குற்றத்தை உணர சாத்தியமற்றத் தலைவர்கள் தங்கள் மேதாவிலாசம் மறையாமலிருக்க சில போலி பக்தர்களை அமர்த்திக்கொண்டு, கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளைப் போலிருப்பார்கள். இதேபோல் சீனத்தின் வாழ்வும் வீழ்ச்சியும் தலைவர்களையே சார்ந்து நின்றிருக்கிறது.

போதை

சிரித்தவன் சிரித்துக்கொண்டே இருப்பான். அழுதவன் அழுதுகொண்டே யிருப்பான். பேசுகின்றவன் பேசிக்கொண்டே இருப்பான். திட்டுகின்றவன் திட்டிக்கொண்டே இருப்பான். தூங்குகின்றவன் தூங்கிக்கொண்டே இருப்பான். இப்படியெல்லாம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது அபினிப் போதை. அதை உட்கொள்ளும் போது யார் யார் எந்தெந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் இருப்பார்கள் போதை இறங்கும் வரையில் ஒருவனுக்கு போதை அதிகரிக்க