சி.பி.சிற்றரசு
3
வாயில், கீழ்நாடுகளுக்குக் கடல்வழி வகுத்துத்தந்த கடல் மன்னன் மார்க்க போலோ கண்டு களித்த களம். இந்தியாவின் நாகரிகத்தையறிய இருபெரும் தூதுவர்களை ஈன்றனுப்பிய நாடு. மகாகவி லீபோ, வரைகோல் வேந்தன் லின்-யு-டாங் போன்ற அறிஞர்கள் பிறந்த பூமி.
"பகையை பகையால் வெல்ல முடியாது, அன்பால் அனைத்தையும் வெல்லலாம், என்ற பொன் மொழியையும், "நீதி வெல்லும் நிச்சயம் வெல்லும்," என்ற பொதுமறையையும் பூதளத்திற்களித்த சாக்கிய சிம்மன் புத்தர் பிரான் பேரொளியை போற்றும் நாடு. ஞானச் சீனமாயும், தர்க்கச் சீனமாயும் இருந்த நாடு, பாசீசச் சீனமாக மாறி இன்று செஞ்சீனமாகத் திகழ்ந்து புகழேனியில் நிற்கும் நாடு
சீனத்தின் ஜோதி மகான் கன்பூஷியஸ். சீனத்தின் சீர்த்திருத்தவாதி, சன்-யாட்-சன் சீனத்தின் நோய் சியாங்-கே-ஷேக், சீனத்தின் தந்தை மா-சேதுங். இந்த நால்வர்களிட்ட எல்லைக் கோடுகளுக்குள்ளே அடங்கிவிட்ட அகிலம்.
கன்பூஷியஸ் காலத்துக் கேற்றவாறு கட்மையைச் சொன்னான், சன்-யாட் அதைச் சற்று மாறுதலோடு மக்களுக்குப் பொதுவாக்கினான், ஷேக் மடமையை வளர்த்தான், மாசே அந்த மடமைக்கு மரண சாசனம் படித்தான் ஒருநாடு வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அந்த நாட்டு மக்கள் மாத்திரம் காரணஸ்தர்கள் அல்லர். அவர்களை அழைத்துச்