பக்கம்:சீனத்தின் குரல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

சீனத்தின் குரல்


களை நங்கூரத்தோடு நிறுத்திவிட்டு அளவற்ற ஆற்றலை, அபினி போதைக்கு அடிமைப்படுத்தி வேற்றுநாட்டார் படையெடுப்புக்குத் தன் நாட்டின் தலைவாயிலைத் திறந்துவிட்டு விட்டு, கைகட்டி. வாய் புதைத்து, கண்களில் ஒளி மங்கி, வீரங்குன்றி, அதுவரை அனுசரித்து வந்த மூன்று மதங்களால் அறவழி செல்ல, அரசியலுக்கு வேண்டிய மறப்போரை மறந்து காலாகாலத்தில் செய்யவேண்டிய கடமையை கைவிட்டு, விழிப்புக்கும் தூக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சதா போதையெனும் சாகரத்தில் வீழ்ந்து கிடந்த நாடு எந்தவகையாலும் பகை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பகை நாட்டரசர்கள் வஞ்சனையால் போட்ட திட்டத்தின் தூதுவனாக உள்ளே கள்ளத்தனமாக நுழைந்த அபினி தன்னைப் பின்தொடர்ந்துவரும் செங்கோலுக்கு வழிகாட்ட, மாற்றார் மணிமுடி ஜொலிக்கத் தன் மண்ணில் இடந்தந்துவிட்ட மண்டலம்.

தன் நாட்டு அழிவுக்குக் காரணமாயிருந்த போதை மருந்தாம் அபினியை உள்ளே வரவிடாமல் தடுத்த மன்னன் சின் -யுவான் - தீ அறியாவண்ணம் இரவோடு இரவாக அந்த மயக்க மருந்தை சீனத்திற்குள்ளே கொண்டுசெல்ல அரசியல் கள்ளர்கள், ஒன்றுகூடி பெருக்கிய கள்ளமார்கட் என்ற வார்த்தையை முதன் முதலில் உலகப் பேரகராதியில் சேர்த்த தரணி.

அகில உலக வல்லரசு நாடுகளிலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடு. ஆசியாவின் தலை