பக்கம்:சீனத்தின் குரல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீனத்தின் குரல்

ஆசியா கண்டத்திற்கு ஆதவனை அறிமுகப்படுத்திய அவனி. உலக ஏழு அதிசயங்களிலே ஒன்றான பெருஞ்சுவற்றின் பிறப்பிடம், ஆகாய விமான காலத்திற்கு முன்பு அகிலத்தின் அவாலைத் தன்பால இழுத்த அதிசயத்தின் தாயகம். யாராலும் எளிதில் தாண்டமுடியாதென்ற அசையாத நம்பிக்கையால் சீனப் பொதுமக்கள் தங்கள் நரம்பின் வண்மையால் கட்டிக்காத்த நெடுஞ்சுவர். இன்று அதன் மேல் வட்டமிட்டு பறக்கும் ஆகாயவிமானம் வல்லூறாகவும், அதன் கீழ் பயந்து பதுங்கிக்கிடக்கும் பாம்பு போலவும் 1400 மைல் நீளத்தில் மேற்கே இருந்து கிழக்குக் கடற்கரைவரை படுத்துக் கொண்டிருக்கும் அப்பெருஞ்சுவற்றின் தாய் நாடு.

அதிசயம் ஒன்று கூடுவிட்டு கூடு பாய்வதைப் போல் ஒருகாலத்தில் அப்பெருஞ்சுவற்றில் குடியிருந்த அதிசயம் இன்று ஆகாய விமானத்திலும், இன்னும் அதைவிட சிறந்த பல பொருள்களிலும் குடிபுகுந்துவிட்டது. அவ்வித பண்டைக்கலைகளுக்குத் தாயகமாக விளங்கிய தரணி.

ஐம்பெரும் துறைமுகங்களை ஆங்கிலேயர்க்கும், அதிசயக் கோட்டைகளை மற்ற அயலாருக்கும் அர்ப்பணித்துவிட்டு கடலில் கால் ஊன்ற முடியாமல் கப்பல்