பக்கம்:சீனத்தின் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சீனத்தின் குரல்


அபினி அத்தியாயம் தொடங்கிய பிறகு அயல் அரசுகள் கால் ஊன்றின. அதற்கு முந்திய அத் யாயத்தில் அதன் உள்நாட்டரசர்களே அதன் குரவளையை நெரித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை கீழ்வருமாறு வர்ணிக்கிறான் பேரறிஞன் கன்பூஷியஸ்.

"மக்கள் புலியைப் பார்த்து நடுங்கிச் சாகின்றார்கள். இந்தப் புலியைவிட மகா பயங்கரமான உருக் காட்டாக புலி அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பெயர் அரசியல் புலி. அதன் உண்மையான உருவம் தென்படவில்லையென்று திகைக்கின்றார்கள், பிடிவாதக் கால்களும், கட்டாயப் பார்வையும், கடினமான அடக்குமுறை வடிவமும், சட்ட வரிகளே அதன் மேவிட்ட கோடுகளாகவும், கொடுமை என்ற கூரிய நகங்களும் கொண்டு நிமிர்ந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் புலியைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று கண்ணீரால் கேட்டான் கன்பூஷியஸ்.

கன்பூஷியஸ் சீனத்தையறிந்த சிந்தனைச் செல்வன், சீர்கெட்டிருந்த சீனத்தைச் சீலமுள்ளதாக்கிய தந்தை, மகவீனும் மகிழ்ச்சியால் கற்ப வேதனையை சகித்துக்கொண்ட தாய்ப்போன்றவன் குற்றமுள்ளவரைக் கண்டித்து குணமுள்ளோரை ஆதரித்த நீதிமான் என்று சீனம் பேசிற்று. எனினும் பெண்குலம் சபித்தது.