பக்கம்:சீனத்தின் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

11


'வஞ்சகரை வீழ்த்த வாள் எடுத்தேன், தாய் தடுத்தாள், சாந்தமடைந்தேன். அன்னையின் அகம் குளிர்ந்தது, அயலாரும் எனக்கிருந்த தாயன்பு கண்டு அகம் குளிர்ந்து நண்பர்களானார்கள்' என்ற முறையில் சீனத்தின் செப்பேடுகள் புகலவில்லை.

"வெஞ்சமரில் வாள் எடுக்க எண்ணினேன் கை இல்லை. ஏற்கனவே எதிரிகளால் என் கைகள் துண்டிக்கப்பட்டிருப்பதை மறந்து, இந்த என் அறியாமையைப் பார்த்த எதிரிகள் எக்காளமிட்டனர்", என்று சொல்லாமல் சொல்லுவதைப் போல் சீனத்திற்கு வீரமுண்டு, வீரத்தின் வாகனமான வாள் உண்டு, வீசுவதற்கு மனம் போன்ற கையில்லை. அந்த மனம் போதையால் அசைவற்று விட்டது! என்பதைப் போல இருந்தது சீனத்தின் குரல்.

வீரத்தை. மூட்ட முடியவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்ச்சியில்லாத காரணத்தால், புத்தி புகட்ட முடியவில்லை. அவர்களுக்கு போதை தலைக்கேறியிருந்த காரணத்தால், நாட்டின் நலிவை நவில முடியவில்லை, நஞ்சொத்த மருந்துண்டு மயக்கமுற்றிருந்த காரணத்தால், அவர்கள் தங்கள் கண்களைத் திறந்து ஜெகத்தைப் பார்ப்பதற்கே நான்கைந்து நாட்களாய் விடுகின்றன. இந்த நிலையில் கடலில் எறிந்த கற்களாய் விட்டனர்: சீனப்புதல்வர்கள், கற்கள் கடலில்தான் இருக்கின்றன கண்டெடுப்புவர்கள் யார்? என்ற வினாவைப்போலத்தான்: சீனத்தின் நிலை இருந்தது. சீன மக்கள் இருந்தனர்; சீனத்தில் செல்வம் இருந்தது, ஆனாலும் சீன நாட்டில்