உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சீனத்தின் குரல்


வேற்றான் கொடி, சீன மக்கள் போதையின் பிடியில், சீனச் செல்வத்தின் பெட்டிச்சாவி சீமைத் துரைகளின் மடியில்.

பதினாலு பதினைந்தாவது நூற்றாண்டில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நடந்த புரட்சிக்குப் பாட்டியாய், கிருஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே கொலை, கொள்ளை, அசம்பாவிதம் அறுவறுக்கத்தக்க செயல்கள், பெரும் பெரும், போர்கள், நட்பிண்மை, நயவஞ்சகம், கொடிய குற்றங்கள் முதலான சகல விதமான அராஜ ரீகச் செயல்களும் செய்து கொண்டிருந்தது.

அந்த கால மக்கள் எண்ணிக்கையாகிய 15 கோடி மக்களை ஆள்வதற்கென்று பத்தாயிரம் அரசாங்கங்கள் இருந்தன. ஆளும் மமதை அதிகரித்த அளவுக்கு அடிமைப்பட்ட மக்கள் அதிகப்படாத காரணத்தால் அரசியலை ஒரு வேட்டைக்காடாக மதித்து ஆங்காங்கே வெறிச் செயல்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில்தான் இடிந்து விழயிருந்த சீனத்தைச் செம்மையாக்க, இருண்ட சீனத்திற்கோர் ஒளி காட்ட பேரறிஞன் கன்பூஷியஸ் தோன்றினான். அவன் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லா காலத்துக்கும் ஏற்றதாயில்லையாயினும் அந்த நேரத்திற்குத் தேவைப்பட்ட அவசர வைத்தியமாயிற்று.