பக்கம்:சீனத்தின் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சீனத்தின் குரல்


சீன சமுதாயத்திலே பெண்களுக்கிருக்கும் உரிமையை, அதிகாரத்தை அடியோடு தொலைத்தாலன்றி சீன மக்கள் வீரர்களாவது இயலாதெனக் கண்டான். கன்பூஷியஸ், ஆகவே, மக்களை ஐந்து பிரிவினராகப் பிரித்தான் 1. அரசன், 2 குடிகள், 3. கணவன், 4. மனைவி, 5. மக்கள். அவரவர்களுக்குள்ளாக் கடமையைப் போதித்தான். என்றாலும் அவன் காலத்து சீனத் தாய்க் குலம் அவனை சபித்தது. ஆண் குலம் வரவேற்றது, அறிஞர் குலம் "சீன நாகரிகத்தின் தலைமேல் ஒரு தீராப் பழிச் சுமையை ஏற்றி வைத்துவிட்டான் கன்பூஷியஸ், என்று முணுமுணுத்தது. சமுதாயத்துறையில் வேண்டுமானால் இது புறம்பாயிருக்கலாம் அரசியல் துறையிலே அவன் கையாண்ட முறைதான் சரியானதென மற்ற அரசுகள் பேசின.

எனினும் சீன மக்களை கன்பூஷியஸ் ரணகளம் அழைத்துச் செல்லவில்லை. தாய்மைக்கு அவர்கள் அளித்த அளவு கடந்த அபிமானத்தின் மூலம், மானாபிமானத்தை விட்டுவிட்டார்கள். அதனால் அயலார் தாராளமாக உள்ளே வர முடிந்தது என்பதை ஜாடையாகக் காட்டினான் கன்பூஷியஸ்.

அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்து பகை மின்னல்களும், ஆயுதச் சாலையின் இடி முழக்கமும் கேட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் சீனம் அமைதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. நீரில் மூழ்கிச் சாகப்போகின்றவனிடம், நடந்த