உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

23


தைச் சொல்லிவிடுகின்றேன், கொஞ்சம் நியாயத்தைச் சொல்லிவிட்டு செத்துப்போ," என்று சொல்வதைப் போல, சீனம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும்போது வாணவேடிக்கை விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியைக் காண சகிக்காத கன்பூஷியஸ் தான் சொன்ன கருத்தில் எவ்வளவு முரன்பாடுகள் இருந்தாலும் இந்தக் கொள்கைகள்தாம் தேவை, தேவை, தேவை என்று வலியுறுத்தினான். இவன் காலத்துக்கு முன்பு தோன்றிய டாய்ஸ் மதமும் இதையேதான் சொல்லிற்று. இவ்விரண்டும் ஒன்றே போலிருக்கவே மக்கள் இரண்டையும் பின்பற்றினார்கள்.

கன்பூஷியஸ், மிகப் பழைய காலத்தைப் பார்த்து அழைத்தவர்களைப் பார்த்துச் சீறினான். அதன் விளைவாகவே பெண் வர்க்கத்திடம் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.

கன்பூஷியனிஸம்

"மிகப் பழைய காலத்தில் மக்களுக்கு அரசர்களே தெரியாது. பிறகு நேசித்துப் புகழ்ந்தார்கள். பிறகு பயந்தார்கள். இறுதியில் அரசர்களை எதிர்த்தார்கள்".

"அறிந்தவர்கள் பேசுவதில்லை. பேசுகிறவர்கள் அறிவதில்லை."