பக்கம்:சீனத்தின் குரல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

77


மேலும் சியாங்கை விடுதலை செய்யவேண்டுமானால் கீழ்க்கண்ட திட்டங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறித்திருந்தார். அவை :

1. சைனாவில் கூட்டாட்சி ஏற்படுத்தவேண்டும்.

2. உள் நாட்டுப் போரை உடனே நிறுத்த வேண்டும்.

3. ஷாங்கையில் சிறையில் வைத்திருக்கும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும். 4. நாடு முழுதிலும் இருக்கிற எல்லா அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யவேண்டும்.

5. மக்களுடைய தேசிய இயக்கத்தை எவ்விதத்திலும் தடை செய்யக்கூடாது.

6. பொதுக் கூட்டங்கள் கூட்டி அந்தந்த கட்சிக்காரர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது.

7. காலஞ் சென்ற சன் -யாட்-சன் அவர்களுடைய மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்.

8. உடனே நாடு முழுதிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் கொண்ட மாநாடு ஒன்று கூட்ட வேண்டும்.

இந்த எட்டுத் திட்டங்களடங்கியது தான் அந்த அறிக்கை.