பக்கம்:சீனத்தின் குரல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சீனத்தின் குரல்


அதிலும் ஒரு மோசடி

இந்த அறிக்கை நான்கிங் சர்க்காருக்குக் கிடைத்தவுடனே ஏதாவது நல்ல பதில் வரும் என்று ஆவலாக எதிர்பார்த்தனர் தளபதிகள். ஆனால் முற்றிலும் ஏமாந்தனர். சர்க்கார்' இந்த அறிக்கையை வாங்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு சும்மாயிருந்துவிட்டது. ஏனெனில் சியாங்-கேஷேக் இந்த நிகழ்ச்சியின் மூலம் இறந்துவிட்டால் சர்க்காரை நம் தாக்கிக்கொள்ளலாம் என எண்ணி விட்டனர் சர்க்கரை கடத்திக்கொண்டிருந்த மந்திரிகள். தன் தலைவன் சிறையில் வாட, எதிரிகள் திட்டத்தை நீட்ட, ஏதாவதொரு முடிவுக்கு சர்க்கார் வந்தே தீரவேண்டுமென்ற தீவிர எண்ணத்தில் மண்ணைத் தூவியதாக இருந்தது சர்க்காரின் எருமைப் போக்கு. அதிலும் ஒரு மோசடித் தோன்றிவிட்டது, இனி சியாங்குக்கு கழுவாயே இல்லையா என ஏங்கினர் சியாங்கின் மனைவியும் சுற்றத்தாரும்.

சிய பங்கை ஒழித்து விட வேண்டுமென்று நினைத்த ம த்திரிகள் ஒரு முறையைக் கையாளலாம் நினைத்தனர், அதாவது :--

சியாங்-கைதியா!பிருக்கும் ஊரில் குண்டைப் போட்டால் ஒரு சமயம் சியாங் இறந்துவிடக்கூடும், ஆனால் சியாங்கைக் கொல்லுவதற்காகத்தான் குண்டை வீசுகிறார்கள் மந்திரிகள் என்று நினைப்பதற்குப் பதிலாக எதிரிகளைக் கொல்லுவதற்காகவும், சியாங்கைக் காப்பாற்றுவதற்காகவும்தான் இப்