பக்கம்:சீனத்தின் குரல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

89


பெருமையை நானிலத்தில் பெற்றிருக்கிறது என்று நல்லோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இலவசமாக, அல்லது யாரோ தானமாகக் கொடுக்க இந்தநிலை அடையவில்லை சீனம். எங்கும் எலும்புக் கூடுகளாலாக்கப்பட்ட கோட்டையை செங்குறுதியென்ற சேற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இனி எக்காலத்திலும் அழிவே இல்லை என்ற அளவுக்கு பாதையை செப்பனிட்டுச் சென்ற பல அறிஞர்கள், அரசியல்வாதிகள், புரட்சிகர்த்தாக்கள் அடிச்சுவட்டின் அகண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறது சீனம்.

ஐரோப்பாவின் நோயாளி என்று தூற்றப்பட்ட நாடும் அதிவிரைவில் முன்னேறியது. ஆயினும் சீனம் சற்றொப்ப 25 தலைமுறைகள் தலையெடுக்காமலே இருந்துவிட்டது. சீன சரித்திரத்தில் உதயமே இல்லை என்று பலர் கைவிட்டனர். எனினும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டது. வெளிநாட்டார் வரலாம், விருந்தாளிகளாக, அயலார் அன்பாக வரவேற்கப்படுவார்கள். ஆனால் ஆயுதத்தோடு உள்ளே நுழையக்கூடாது. எங்களுக்கு வெளிநாட்டு உணவு தேவையில்லை, யாருக்கு உணவு தேவை என்ற வாசகங்களே எங்கும் காட்சியளிக்கின்றன.

"நாதியற்றவர்களாய் இனி யாரையும் நடுத்தெருவில் நடமாட விடமாட்டோம். எங்கள் மரணத்தின் மேல் ஆணை, மங்காத வாழ்வின்மேல் ஆணை, மன