பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17 எங்களை ஆளாக்கிய ஐயா

எஸ். சாந்தா சோமசுந்தரம் B.Sc.,

(மகன் வழிப் பேர்த்தியாகிய சாந்தா, தம் ஐயாவின் குழந்தை வளர்ப்பு முறைகளை நினைவு கூர்கிறார்.)

எங்கள் ஐயா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அறிவுரை களும் அடுத்துப் பழமொழிகளும் தான். எங்கள் சிறுவயதில், அன்று சொன்னவை மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து, இன்று அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. அன்பு காட்டுகையில் அன்பாகக் கூறி, கண்டிக்கையில் கோபமாகக் கூறித் திருத்துவதற்கு அன்று நமக்கு இருந்த ஐயா, இன்று நம் பிள்ளைகட்கு இல்லையே என்று தோன்று கின்றது. அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை. கேட்பதற்கு அப்பொழுது நேரம், பொறுமை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போதோ எல்லாமே இயந்திர வாழ்க்கையாகி விட்ட நிலையில், தானாகத் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடும் பொழுது சிறு சச்சரவு வந்தால், உடனே ஒரு பாரதியார் பாட்டு ‘ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை