பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

147

வையாதே பாப்பா’... என்பார்கள். மாலை நேரத்தில், விளக்குப் போடத் துணை தேடுகையில், ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்ற பாரதியார் பாட்டைப் பாடிக் கொண்டே போ எனக் கூறுவார்கள். விளையாடுகையில் சிறு பிள்ளை யானால், சிறு பிள்ளைக்கு விட்டுக் கொடு என்றும், பெரிய பிள்ளைகட்குத் திருப்பி பதில் சொன்னால் அவர்கள் சொல்வதனால், உடம்பில் காய்த்துத் தொங்குகிறதா என்றும் கேட்பார்கள். சக வயதுப் பிள்ளையானால், “பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்” என்று கூறுவார்கள்.

ஒரு முறை பாரதிதாசன் ஐயா அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல் “வாருங்கள்” என்று கூறி விட்டேன். உடனே, ஐயாகோபப்பட்டு, “வரவேற்க நாங்கள் இருக்கி றோம்; நீ வணக்கம் என்று கூற வேண்டும்” என்றார்கள்.

சாப்பிடுகையில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பார்கள். சிறு வயதில் கீரையைப் பார்த்தால், விளக்கெண்ணெய் சாப்பிடப் போவதைப் போல் சங்கடமாக இருக்கும். ஐயாவை ஏமாற்றி விட்டு, சாப்பிடாமல் தப்பிக்கவே முடியாது.

ஐயா அவர்களின் கல்வி ஆர்வத்தினால்தான் வசதியில்லாத நிலையிலும் நாங்கள் படிக்க முடிந்தது. அதே சமயம் நாங்கள் தற்பெருமை கொள்ளுதல் கூடாது என்பதற்காகக் “கற்றது கைம் மண்ணளவு” என்பது ஒளவையார் வாக்கு என்பார்கள். பெண் குழந்தைக்குப் பொறுமை மிக வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்.

யாராவது, நம் மனம் வருந்தும்படி செய்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நாமும் திருப்பிச்