பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 கலங்காத நெஞ்சம் கலங்கியது

சுசீலா சுப்பிரமணியம்

(மகள் வழிப் பேர்த்தியாகிய சுசீலா, சண் முகனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தாம் அறிந்தவற்றை உருக்கமுடன் கட்டுரையாக்கித் தந்துள்ளார். நம்மையும் உருக வைக்கிறார்.)

முப்பெரும் வேந்தர் காலத்திலிருந்தே மதிப்பும் பெருமையும் பெற்ற தன வணிகர் குலத்தில் செல்வச் செழிப்பு மிக்க, படிப்பாற்றல் மிக்க குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும், அழகம்மை ஆச்சி அவர்கட்கும் பிறந்த ஒரே ஆண்மகன் எங்கள் ஐயா. வயி. சு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆவார். எங்கள் ஐயாவைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் அவர்களின வம்சா வழியை நான் தெரிந்து கொண்டதை எழுத ஆசைப்படுகிறேன்.

எங்கள் ஐயாவின் தந்தையார் சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் தாய் நாட்டிலும், மலாயா நாட்டிலும் புகழ் பெற்றவர்கள். மிகுந்த திறமையும், கெட்டிக்காரத் தனமும், கடின உழைப்பும், நேர்மையும், தர்ம சிந்தனையும், பரோ பகாரக் குணமும், பாசமும் உள்ளவர்கள். சின்ன வயதிலேயே கடல் கடந்து மலாயா நாடு சென்று