பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

150 சீர்திருத்தச் செம்மல்

சிறப்பான முறையில் அங்குத் தொழில் புரிந்து நன்கு பொருளீட்டி, அங்குத் தர்மங்கள் பலப்பல செய்து, மலாயா நாட்டில் கோவிலும் கட்டிய வர்கள். மலாயா அரசால் பாராட்டப் பட்டவர்கள். எங்கள் ஐயா அவர்களின் தந்தையார் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பெருமையுடன் எடுத்துக்காட்டாக வாழ்ந்த வர்கள்.

அவர்களின் துணைவியார் - எங்கள் ஐயாவின் தாயாரவர்கள் கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்ந்தவர். வாழ்நாளில் முக்காற் பகுதி கணவர் மலாயா நாட்டில் இருந்த போதும் அடிக்கடி தாய் நாடு வந்து உடன் திரும்பி விடும் நிலையிலும் அந்தப் பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்து, கணப் பொழுதும், அயாரது, எங்கள்ஐயா, அவர்களின் சகோதரிகள் இருவர் ஆக மூன்று குழந்தைகளையும் கண்போலக் காத்து வந்தார். தினம் வரும் விருந்தினர், சுற்றத்தாரை வரவேற்று, வேண்டியவர்கட்கு வேண்டியதை அளித்து, விருந் தோம்பல் பண்பிலும் தலை சிறந்து விளங்கினார்; கணவர் மிகச் சின்ன வயதிலேயே காலமான பின்னர், அதையும் தாங்கி, கண்டிப்புடனும், திட்டத்துடனும் உறுதியோடும் செயல் பட்டுக் குழந்தைகளை மிக மிக நல்ல முறையில் மேன்மையாகக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததால் மிக நல்ல முறையில் வளர்க்கப்பட்டவர்கள் எங்கள் ஐயா. அந்த நாளிலேயே மிகச் சின்ன வயதிலேயே வெள்ளையனைத் தோற்கடிக்கும் ஆங்கில உச்சரிப் போடும், தங்கு தடையின்றி இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவார்கள்.

எங்கள் ஐயா அவர்களின் இல்லத்தில் "இன்ப மாளிகை" யில் நாங்கள் பேரன், பேத்திகள் வாழ்ந்த