பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 191

லிருந்து தந்தையாரவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். தீர்ப்பு விவரம் கூறினார்கள். சற்றுப் பொறுத்து "மகாத்மா காந்தி சொன்னது தான் நடந்தது. 'நான் வழக்கை முடித்துவிட்டு வருகிறேன்.' என்று கூறிய என் வாழ்நாள் முழுவதும் முடியாது போய் விட்டது. என்னை இந்த நிலைமைக்கும் கொண்டு வந்து விட்டது. அன்று மகாத்மா, 'நீங்கள் இதிலிருந்து வெளிவந்து விட வேண்டும்' என்று கூறியதன் பொருள் இன்று தான் விளங்குகிறது. 'நீங்கள் வழக்கை விட்டாலொழிய, வழக்கு உங்களை விடாது' - என்பதையே அன்று அவர் அப்படி உணர்த்தியுள்ளார். அதன் பொருள் அப்பொழுது விளங்கவில்லை," என்று கூறிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு நானும் வேதனையில் மூழ்கினேன். தந்தையும் மகளும் அந்நிலையிலிருந்து விடுபடச் சிறிது நேரம் பிடித்தது. இவ்வாறு அனைத்தும் இழக்கும் நிலை வந்துங்கூடப் பிறருக்கு உதவும் மனத்தை மட்டும் இழக்கவில்லை.

தந்தையாரவர்கள் வறுமையின் பிடியிலிருந்த பொழுது, அவர் களின் கடைசிக் காலத்தில் "லோகோபகாரி" என்ற தேசியப் பத்திரிகையை நடத்தி வந்த திரு. பரலி. சு. நெல்லை யப்பர் அவர்களிடமிருந்து ஓர் கடிதம் வந்தது. முன்பு போலச் செல்வச் செழிப்புடன் வை.சு.ச. இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பண உதவி கேட்டு எழுதப்பட்டது அக்கடிதம். நான் காரைக்குடியி லிருந்து அந்தச் சமயம் வாரம் தவறாது தந்தையாரவர்களைக் கானாடுகாத்தான் சென்று பார்த்து வருவது வழக்கம், அப்படி ஒரு முறை சென்றிருந்த போது கடிதத்தை எடுத்துப் படிக்கும் படி கூறிவிட்டு, என்றும் தன்னம்பிக்கை, தைரியமுடன்