பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27

எனப் பெயர் வைத்திருந்தனர். இது பொதுத் தொண்டர் பலர்க்கும் புகலிடமாக விளங்கியது.

தஞ்சை மராட்டியர் குடும்பத்தினரைச் சேர்ந்த மஞ்சுளா பாய் என்னும் அம்மையார், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுத் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகி விட்டார். தனித்து உழன்று கொண்டிருந்த அம்மையாருக்கு இப்பொதுத் தொண்டு ஆறுதலாக இருந்தது.

பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் அம்மையாரும் உடன் செல்வது வழக்கம். பெரியார் தென்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், கானாடுகாத்தான் இன்ப மாளிகையில் தங்குவது வழக்கம். அவருடன் வருவோரும் இங்கேயே தங்குவர். இவ்வாறு அடிக்கடி வந்து போனமை யால் அம்மையாருக்கும் சண்முக னார்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஒருவர் கருத்து மற்றவர்க்குப் பரிமாறப் பட்டது.

இருவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்ட கருத்து, நீண்ட நாள் சிந்தனைக்குப் பின்னரே முளைவிடத் தொடங்கியது. கலப்பு மணத்தையும், மாதர் மறுமணத்தையும் ஆதரித்து வந்தவரல்லவா சண்முகனார். சொல்லிக் காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே சிறந்தது என்று எண்ணினார். சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, பெரியாருடன் சேர்ந்து தொண்டு செய்துவரும் அம்மை யாரும், இளமையில் தனித்திருந்து தொண்டு செய்வதைவிடத் துணையுடன் இருந்து தொண்டாற்றுவதே மேல் எனக் கருதினார்.

இருவர் உள்ளங்களும் ஒரு வழிப்பட்டன. தந்தை பெரியாரின் ஒப்புதலும் கிடைத்தது. திருமணம் செய்து கொண்டனர்.