பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உரிமைவாழ்வு இருவர் வாழ்விலும் புதிய தென்றல் வீசத் தொடங் கியது. தாராள மனங்கொண்ட சண்முகனார்க்கேற்ற துணையாக மஞ்சுளா அம்மையார் நடந்து கொண்டார். முற்போக்குச் சிந்தனை கொண்ட அம்மையாருக்கேற்ற துணையாகச் சண்முகனார் நடந்து கொண்டார். 'துணை' என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக அவ்விரு வரும் வாழ்ந்து வந்தனர். பொதுப்பணி எவ்வளவு ஆர்வத்துடனும் ஈடுபாட்டு டனும் அம்மையார் செய்து வந்தாரோ, அதே ஆர்வமும் ஈடுபாடும் எள்ளளவுங் குன்றாமல், சண்முகனாரைப் பேணிக் காப்பதிலுங் காட்டி வந்தார். சண்முகனாரும் 'அம்மா! வாங்க!' என்றுதான் அழைப்பார். மேடையிலே பெண்ணுரிமை பேசி விட்டு, வீட்டிலே பெண்ணடிமையை வளர்த்து வரும் ஏனைய சொல் வீரர்களைப் போல் நடவாமல் வீட்டிலும் செய்து காட்டிய செயல் வீரர் நம் சண்முகனார். அவ்விருவர்தம் அன்பும், பண்பும், செயலும் நடத்தையும் இக்கால இளைஞர்க்கு, ஒரு பாடமாக வழி காட்டியாக அமைவது நலம்.