பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50 சீர்திருத்தச் செம்மல்

இது திரைப்பட நிகழ்ச்சி, ஆகினும் இத்தகு மாந்தர் உண்மை வாழ்க்கையிலும் அங்கங்கே இருத்தலையும் காண்கிறோம். திரைப்படத்திலே 'தணிகாசலம்' கானாடு காத்தானிலே சண் முகனார், இன்ப மாளிகைக்குச் சென்று வந்தோர் அறிவர் அங்கு விருந்தோம்பும் முறைகளை. அவர்தம் உளப்பாங்கறிந்து மஞ்சுளா அம்மையாரும் அவ்வாறே அன்பின் சின்னமாக நின்று விருந்து படைப்பார்.

தாயும் தந்தையும் தம்பிள்ளைகளை எவ்வாறு வற்புறுத்தி வற்புறுத்தி, ஊட்டியூட்டி. உண்ணச் செய்வரோ அவ்வாறே 'இது உடம்புக்கு நல்லது, இதை உண்ணுங்கள்; இன்னும் உண்ணுங்கள்' என்று வற்புறுத்தி, உண்ணச் செய்வார்.

அவ்வில்லத்திற்குட் புகுந்தோர் உண்ணாமல் வெளி வருதல் இயலாது. கட்டாயம் உண்டு தான் ஆக வேண்டும். அகம் மலர முகம் மலர, இன்சொற்பேசி, உண்ண வருக என்று அழைப்பது தான் இயல்பு. ஆனால் சண்முகனார் அவ்வழக்கத்திற்கு மாறுபட்டவர். 'சாப்பிடுங்கள்' என்று ஆணைதான் இடுவார். ஆனால் அவ்வாணையில் அன்பும் உரிமையும் உறவும் அளவளாவிக் கிடக்கும். வந்தோர், பரிமாறப்பட்ட உணவின் முன்னர் அமர்வதைத் தவிர, மறுமொழி கூறவே இயலாது.

பொதுவாக விருந்தோம்பும் பண்பிலே செட்டிநாடு தனிப்புகழ் பெற்றது. இவரோ அதிலும் ஒரு தனித்தன்மை படைத்தவர். உளம் ஒன்றிய முறையையும் கலந்து கொடுப்பார்.

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நல்வியல்பு கொண்டவர் சண்முகனார். அதிலே இன்பங் கண்டு திளைப்பவர்.