பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 7f லிருந்த தம் மனைவியாரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். அம்மையார் வர இசையவில்லை. மனைவியாரை அங்கே தனித்திருக்க விட்டுவிட்டுத் தாம் மட்டும் இங்கேயிருக்க விரும்பவில்லை பாரதியார். சில நாள் மட்டும் தங்கியிருந்து விட்டுக் கடையத்துக்குப் புறப்பட்டு விட்டார். வீறுபெறும் பாவலன் சோறு பெறத் துயருறுவதா? என நெஞ்சு ருகிய சண்முகனார், அக்காலத்தே திங்கள் தோறும் நாற்பது உரூவா தவறாமல் அனுப்பிக் கொண் டிருந்தார். இக்காலத்தே உண்மைப் பாவலர் தம் நிலை யறிந்து, தரமுணர்ந்து உதவுவார் சிலரேனும் இருந்தா லன்றோ உயரிய இலக்கியங்களைத் தமிழ்நாடு பெற முடியும்? சங்க காலத்துப் புலவர்களை அக்காலத்து வேந்தர்கள் புரந்து வந்தமையாலன்றோ சங்க இலக்கியக் கருவூலங்கனை நாம் பெற முடிந்தது! புலமைக் கடலுள் மூழ்கிய சான்றோர், பாட்டு முத்துகளைத் தேடுவரே அன்றி வெறும் பணங் காசு களைத் தேடியலைய விழையார். அதனால் முத்தெடுக்க மூழ்கி உழலும் பாவலர்க்குக் கை கொடுத்துக் காக்க வேண்டுவது நாட்டு மக்களுடைய கடமையாகும். பாரதியின் விளையாட்டு நாடகத் துறையில் தனிக் கொடி நாட்டிய அவ்வை தி. க. சண்முகம் அவர்கள், காரைக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த சமயம், பாவேந்தர் பாரதிதாசன் கானாடுகாத்தானில் இருக்கும் செய்தியறிந்து, அவரைக் காணக் கானாடுகாத்தானுக்குச் சென்றார். அப்பொழுது சண்முகனார், கவிஞர்கள் இயல்பை எடுத்துக் கூறி, அவர்களிடம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.