பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே." (புறநானூறு பாடல் எண். 246) குறிப்பிடப்பட்டிருப்பதுபோல, நெருப்பில் பாய்ந்து விடுவதற்கு துணிந்துள்ளதை சிவகங்கை நாச்சியார், தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இவர்களது பராமரிப்புத் தொகையாக மாதத்திற்கு எவ்வளவு தேவை என்பதற்காக சிவகங்கை தாசில்தார், அப்பொழுது தயாரித்த ஒரு பட்டியலில் இருந்து சிவகங்கை இறுதி மன்னரது குடும்பத்தினர் மற்றும் பணியாட்கள் பற்றிய விவரம் கிடைத்துள்ளது.[1]

அரச பிராட்டிகள்

முதல் மனைவி
ரெங்காத்தாள் நாச்சியார் 45 வயது
இருளாயி (சுவீகார மகள்) 15 வயது
லெகஷ்மி (சுவீகார மகள்) 12 வயது
இரண்டாவது மனைவி
கருப்பாயி நாச்சியார் 40
உங்காத்தாள் (சுவீகார மகள்) 18

மூன்றாவது மனைவி

ராக்கு நாச்சியார் 50
(வேலு நாச்சியார் மகள்) 25

பெண் பணியாளர் - 2
தண்ணிர் எடுப்பவர்கள் (பெண்) -2
தோட்டி - 1
ஸ்தானாதிபதி (தாங்கிபிள்ளை) - 1
வக்கீல் (முத்துசாமிப் பிள்ளை) -1
கண்காணிப்பாளர் (அப்புராஜா) - 1
ஓவர்சீயர் (மீனாட்சி சுந்தரம்பிள்ளை) -1
வாயில் காப்போர் - 2
சலவைத் தொழிலாளி - 1

இவர்கள் அனைவருக்கும் உடை, உணவு, ஊதியம் என்ற வகையில் மாதச் செலவாக ரூ. 220 1/4 மாதம் என கணக்கிடப்பட்டது. ஆனால் இராமநாதபுரம் கலெக்டர் ரூ.100/- அலவன்ஸ் வழங்கலாம் என பரிந்துரைத்தார்.[2] அதன் பேரில் கும்பெனித் தலைமை அப்பொழுது


  1. Madura District Records. VoI.4681/30. 1, 1833. P. 32-33
  2. Madura District Records. VoI.8900/7. 2. 1833. P. 47