பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


செப்பேடுகள்

1. சூடியூர் சத்திர செப்பேடு கி.பி.1795-ல் வழங்கப்பட்டது (ம.பா.ம. பக்கம் 680-681-ல்) இந்தப்பட்டயத்தின் வரிகள்.19-21ல் 'பூர்மது அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் பிரிதிவி ராச்சியம் பரிபாலனம் பண்ணி அருளா நின்ற சாலிவாகன சாகத்தம் 1716....'
"சேது மார்க்கத்தில் பிரதானி மருது சேர்வைக்காரர் சூடியூர் சத்திரம் அன்னதானத்திற்கு....' வரையப்பட்டுள்ளது.

சிறு வயல் செப்பேடு

இந்த செப்பேட்டை இந்த நூலாசிரியர் 1991-ல் நடைபெற்ற தொல்லியல் துறை அஞ்சல் வழிக் கருத்தரங்கிற்கு தமது நீண்ட விளக்கத்துடன் அனுப்பி வைத்தார். அந்தக் கருத்தரங்க தலைமைப் பொறுப்பில் அப்பொழுது இருந்த நான் வரைந்த அதே தலைமை உரையை (ஏற்கனவே அச்சில் வந்ததை) இப்பொழுது இங்கு கொடுத்து இருக்கிறேன். இந்தச் செப்பேடு போலியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

கல்போல் எழுத்து என்ற பழைய வழக்கை ஒட்டி கல்லிலும் செப்பிலும் வெட்டி வித்தனர். 'அரசு ஆணைகள், அறக்கொடைகள், மறச்செயல்கள் பற்றிய செய்திகளை 'சந்திர ஆதித்த காவலர் வரை சாட்சி பகர்வதற்காக செப்பேடுகளில் அமைத்தனர். பொதுவாக, கல்வெட்டுக்களை போன்று செப்பேடுகளும், மங்கலச் சொல்லுடன் துவங்கி, ஆண்டு, திங்கள், நாள், வழங்கப்படுவதின் நோக்கம், பட்டயத்தை வரைந்தவர், காப்புநிலை என்ற பகுதிகளுடன் பொறிக்கப்படுவது வழக்கம்.[1] ஆனால் இந்த செப்பேட்டில் அந்த பகுப்புகள் காணப்படவில்லை. அவைகளுக்கு மாறாக 'சாலிவாகன சகாப்தம் 125க்கு மேல் நிலையான கானப்பேர் என்கிற" தொடருடன் துவங்கி அந்த ஊரின் பழமையை அறுதியிட்டு சொல்கிறது. அந்த ஊர் பற்றிய இத்தகு தொன்மைக்கு உறுதியான காலவரம்பு எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது புரியவில்லை. புறப்பாடல் ஒன்றில் இந்த ஊர் குறிப்பிடப்படுவதால் சங்க காலத்துக்கு முன்னர்கூட இந்த ஊர்நிலைத்து இருந்திருக்கலாம். செப்பேட்டின் 20வது வரியில் '1800 வருஷம்' என்ற சொற்றொடர் இருப்பதினால் இந்த செப்பேடு கி.பி.1800க்கு பின்னர் வரையப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை உறுதிபடுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி (வரி 26) 'தளவாய் நைனப்பன்[2]


  1. Subramaniyam & Venkatraman - Tamil Epigraphy a survey (1980) P: 18
  2. Rajayyan.Dr.K. - History of Madura (1974) P: 277