பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 245


இதனையடுத்து படிச் செலவு வழங்கிய உத்திரவோ அல்லது முத்துக் கருப்பத் தேவரை, விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கிய விவரம் அல்லது அவரது தலைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஓராயிரம் சக்கரம் பணம் பரிசு வழங்கப்பட்டது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இவருடன் இணைந்து செயலாற்றிய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக் காரரைக் கைது செய்தவுடன் அவர்மீது பாளையங்கோட்டை சிறையில் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அபிராமத்தில் 15.7.1803-ல் தூக்கில் தொங்கவிடப்பட்டார். ஆனால் முத்துக்கருப்பத்தேவரைப் பற்றிய கி.பி.1816-ல் வருட ஆவணம் உள்ளது. அப்பொழுது கலைக்டர் அவரது மனு ஒன்றினை 15.8.1816 தீயன்று மேலிடத்திற்கு பரிந்துரைத்தது அது.

ஆதலால் முத்துக் கருப்பத் தேவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

பக்கம்: 482, 83

"இக்கிளர்ச்சியில் மக்களது ஆவேசம் மோசமான அடக்குமுறையினாலும், சிவகங்கைச் சீமை சேர்வைக்காரர் துரோகத்தினாலும் ஒடுக்கப்பட்டு ஓய்ந்தது' (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் பக்கம் 121-22) மேலே கண்ட எனது எழுத்துக்களை மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர் இந்தப் பக்கத்தில் அப்படியே எடுத்துக் கொடுத்துவிட்டு 'வாழ்நாளெல்லாம் ஆங்கிலேயரை எதிர்ப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்க சின்னப் பாண்டியரின் ஒரே ஒரு செயலை மட்டும் வைத்துக் கொண்டு சிவகங்கைச் சீமை சேர்வைக்காரரின் துரோகம் என்று கூறிவிடுவதா? ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்து ஒருவரை எடை போட்டு விடலாமா?' என்று கேட்டு விட்டு மீண்டும். 'இந்தப் பிரச்சினையில் குற்றம் சாட்டுகிறவர். தீர விசாரணை செய்தாரா? இல்லை ஆங்கிலேயரால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள அதாவது ஒரு தரப்பு ஆவணத்தை வைத்துக் கொண்டு முடிவுக்கு வந்துள்ளார். மருது பாண்டியர் தரப்பு ஆவணங்களைத் தேடியதாகக் குறிப்பு இல்லை. உண்மை அறிய வரலாற்றில் புகுந்து விசாரணையாவது மேற்கொண்டாரா?”

இந்த வினாவையும் அந்த நூலாசிரியர் எழுப்பி உள்ளார். ஆதலால் இந்தப் பக்கங்களில் அந்த வினாவிற்கான விளக்கத்தையும் கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன். பொதுவாக சிவகங்கைச் சீமை பற்றிய வரலாறு நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், எனது இந்த நூல் வரையுமாறு கேட்டுக் கொண்ட பல அன்பர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருது பாண்டியரது விடுதலை இயக்கத்திலும்,