பக்கம்:சீவகன் கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108 சீவகன் கதை யெல்லாம் விளக்கி, 'விரைவில் வெற்றி பெறுக!' எனவாழ்த்தினள். தோழர் அனைவரும் தாம் பெறுவதுவெற்றியே ய என வீரமுழக்கம் செய்தனர். தலை நகரிலே : சீவகன் பின்னர்த் தன் தாயைத் தன் மாமனிடத்துச் செல்ல ஏற்பாடு செய்து, தவப்பெண்டிர் நூற்றுவரைத் துணையாக அனுப்பினன் ; தானும் மறு நாள் இராசமா புரத்துக்குச் சென்று அனைவரையும் கண்டு பின்பு அங்கு வந்து சேர்வதாகவும் கூறினன். பின்பு அவ்வாறே தன் தோழர் சூழப் பறப்பட்டு, ஏமாங்கத நாட்டு எல்லையில் புகுந்து, இராசமாபுரத்தை அடைந்தான் சீவகன். இராசமாபுரத்து எல்லையில் ஒரு சோலையில் தங்கி இராப்பொழுதைக் கழித்தனர் அனைவரும். மற்றை நாட் காலையில் எழுந்து அனைவரும் தத்தம் காலைக்கடன் முடித்துப் பணிமேற்செல்ல, சீவகனும் மகளிர் விரும்பும் எழில் மிக்க உருக்கொண்டு, அவ்விராசமாபுரத்தே சென்றான் ; தன் சுய உருவோடு செல்லின், ஒரு வேளை ஊரிலுள்ளோர் 'சீவகன் வந்தான்,' என, அது கட்டியங்காரனுக்கு எட்டிவிடுமோ என்ற காரணத்தால், மாற்றுருப்பெற்றான் போலும்! காலமும் இடனும் போர்க்குப் பார்த் திருந்தமையின், அப்போதே வெளிப்பட்டுப் போர் செய் தலைச் சீவகன் விரும்பவில்லை போலும்!

அழகே உருவெனத் திரண்ட தோற்றத்தோடு தெருவிடைச் சென்ற சீவகனைக் கண்ட மகளிர், தத்தம் நிலை கெட்டுக் கருத்தழிந்தனர். ஒரு புறத்தே அழகே திரண்ட மங்கை ஒருத்தி பந்தாடிக்கொண்டிருந்தாள். தேவர் அவள் பந்தாடுதலை இடை வை, வத்துப் பந்தாடும் கலை நலத்தையே சில பாடல்களில் அழகுபடத் தீட்டு கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/109&oldid=1484636" இலிருந்து மீள்விக்கப்பட்டது