பக்கம்:சீவகன் கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

னென்றும் ஒரு கணி கூறியதை நினைத்தான்; இன்னானென்று அறியானாயினும், அவனைத் தன் வீட் டிற்கு அழைத்துச் சென்றான். தன்னை மயக்கிய தையலின் வீடு செல்லும் மையலிலே சீவகனும் உடன் சென்றான்.

சாகரதத்தன் என்னும் அவ்வணிகன், கணிகூறி யதைச் சீவகனுக்கு உணர்த்தித் தன் மகளை மணக்க வேண்டினான். சீவகனும் மகிழ்ந்தான். மணமும் நடந்தது. அவர்தம் நலந்தரு வாழ்வைத்தேவர்,

"கட்டி லேறிய காமரு காளையும்
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்
விட்டு நீங்குத லின்மையின் வீவிலார்
ஒட்டி யீருடம்பு ஓருயி ராயினர்.’(1981)

எனக் காட்டுகின்றார்; மேலும் சில பாடலுள் அவர்களது கருத்துக் கலந்த வாழ்வைப் பாராட்டுகின்றார்; மறு நாளே சீவகன் அவளைப் பிரிய வேண்டுதலின், ஒரு நாளில் பெற்ற புதுமணச் சிறப்பைப் பலபடப் பாராட்டு கின்றார். பின்பு மற்றை நாட்காலையில் விமலைக்குப் பிரிவுணர்த்தி விரைந்து வருவதாகக் கூறித் தன் தோழரை வந்தடைந்தான் சீவகன்.

சுரமஞ்சரியை மணக்கத் துணிந்தான்

விமலையிடம் விடை பெற்று வந்த சீவகன் விரைந்து தன் நண்பர்களைச் சார்ந்தான். நண்பர்களும் அவனிடம் நலம் வினவினார்கள். அவனும் விமலையை மணந் தமை கூறி, அவள் பெயரையும் கூறினன். கேட்ட நண்பர்கள் அவனைக் காமன் எனப் புகழ்ந்தார்கள். எனினும்,அவர் களோடு உடனிருந்த புத்திசேனன், அவர்கள் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை; பெற்றோர் கொடுக்கக் கன்னியை மணந்ததில் சிறப்பு யாதுமில்லை என்றான். மேலும், அந்நகரத்திலே மற்றொருசார் கன்னி மாடம் புகுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/111&oldid=1484037" இலிருந்து மீள்விக்கப்பட்டது