பக்கம்:சீவகன் கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்மை வெளிப்படுதல்

ஆண்களையே காணக் கூடாத ஒரு பெருஞ்சபதம் செய்து, தனித்துத் தங்கி வாழ்கின்ற சுரமஞ்சரி என் பாளைச் சீவகன் மணப்பின், அதுவே பெருமையுடைய தென்றும், பின்னரே சீவகன் ‘காம திலகன்’ என்று போற்றப்படுவான் என்றும் கூறினான். பாவம்! அச்சுர மஞ்சரி சுண்ணத்தால் மாறுபட்ட மனத்தளாகி, கன்னி மாடம் புகுந்து, 'மணந்தால் சீவகனையே மணப்பேன்!' என்று சபதம் பூண்டிருக்கின்ற செயலைப் புத்திசேனன் அறியான் போலும்! புத்திசேனன் கூறிய வார்த்தை களைக் கேட்டான் சீவகன்; புன்சிரிப்புக் கொண்டான். அவன் அறிவான் சுரமஞ்சரியின் சூளுரையும் தவமும் தன்னைப்பற்றிய நினைப்பிலே உண்டானவை என்பதை. எனவே, அவன் தன் நண்பனை நோக்கி, 'கவலற்க; நான் நீ கூறிய சுரமஞ்சரியை மணக்காவிட்டால், அன்பிலா தாளைக் கூடிய கொடுமைக்கு உள்ளாவேன்! நீ நாளைக் காமன் கோட்டத்திற்சென்று சிலைக்குப்பின் மறைந்திரு. நான் அவளோடு வந்து, காமதேவனிடம் அவள் என்னை மணக்க முறையிடும் காட்சியைக் காட்டுவேன்!' என்று உரைத்தான். அவ்வாறு கூறிய சீவகன், மேலும் அங்கே நிற்க விரும்பாமல், தன் நண்பனை மறு நாள் காமவேள் கோட்டம் வரப் பணித்து, சுரமஞ்சரி தங்கிய கன்னி மாடம் நோக்கி விரைந்து சென்றான். சீவகன் கிழவனானான்:

தன் சுய உருவத்தோடு சென்றால் சுரமஞ்சரியைக் காண முடியாது என்பதைச் சீவகன் நன்கு அறிவான். அவளுடைய சபதம் மிகக் கொடுமையானது. எனவே, அவன் உடலெலாம் ஒட்டி நரைத்துத் திரைத்த ஒரு கிழவனாய் உருக்கொண்டான். விஞ்சையன் கற்பித்த உரு மாற்றும் மந்திரம் அவனுக்கு உற்றுழி உதவியது போலும்! சீவகனை இவ்வுருவில் காட்ட விரும்பும் தேவர் சில பாடல்களால் அவன் கிழத் தன்மையை விளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/112&oldid=1484022" இலிருந்து மீள்விக்கப்பட்டது