பக்கம்:சீவகன் கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஏறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சிலென் றெறியான்
மாறுஅன்மையின் மறம்வாடும்என்
றிளையாரையும் எறியான்
ஆறுஅன்மையின் முதியாரையும்
எறியான் அயில் உழவன்.'(2261)

என்று அழகுபட வீரத்தை விளக்குகின்றார் தேவர்.

'தூசுலாம் பரவை அல்குல் துணைமுலை மகளிராடும் ஊசல்போல்' (2268) கட்டியங்காரன் படைகள் சிதறின. நண்பரும் பிறரும் செய்த போர்களையெல்லாம் நன்கு விளக்கிய தேவர், இறுதியில் சீவகன் செய்த பெரும் போர் நிலையையும் காட்டுகின்றார். சீவகன் வாள் வளைந் ததும் பகைவர் தலையும் முடியும் பிறவும் தாமே வந்து குவிந்தன என்கிறார் தேவர். பல வளர்த்துவது ஏன்? இறுதியில் வான் வழி வந்த மொழிப்படியே சீவகன் என் னும் சிங்கம் கட்டியங்காரன் என்னும் யானையின் உயிரை உண்டது.

போர் நின்றது; அனைவரும் சீவகனைச் சூழ்ந்து வா வாழ்த்தினர். மண் மகளுக்கு இருந்த வருத்தம் நீங் கிற்று. தனக்கு உரிய சச்சந்தன் மகனுக்குத் தான் உரிய வளானமை பற்றி மகிழ்ந்தாள் நிலமகள். சீவகனும் அனைவர்தம் வாழ்த்தையும் ஏற்றுத் தன் அன்னையைப் பணிந்தான். விசையை தன் மகன் வெற்றியைக் கண் குளிரக் கண்டாள். அனைவரும் அரச முழவம் ஆர்ப்பத் தலை நகருள் புகுந்தனர்.

அரசை ஏற்றான் :

தன் பாடற்றலைவன் உரிமைப்பதி புகுந்து அரசுரிமை ஏற்கும் பெருஞ்சிறப்புத் தேவரை மிகவும் மகிழ்வித் திருக்க வேண்டும். நகர் புகும் சிறப்பைக் கூற வரும் தேவர், திரிபு யமகம் முதலிய அணி நலன்களெல்லாம் கலக்க அழகழகாக எடுத்துக் காட்டுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/127&oldid=1484579" இலிருந்து மீள்விக்கப்பட்டது