பக்கம்:சீவகன் கதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை முதூர்க்
கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.' (2327)

என்ற பாடலோடு அவர் பூமகள் இலம்பகத்தைத் தொடங்கு கின்றார். இது போன்றே இன்னும் சில பாடல்களும் அமைந்துள்ளன. தொட்டுக் காட்டும் உரையாசிரியரும் இப்பாடலுக்கு நல்ல விளக்க உரை தருகின்றார். 'கண் ணாடி தன்னைச் சேர்ந்தார் செயற்படி ஆட்ட ஆடி, காட் டக் காட்டும் தன்மை போன்று மகளிர் தோள் சேர்ந்து அவர் தோள்வழி இயையும் மார்பையுடைய சீவகன், போர்க்களத்தே எவ்விடத்தும் கண் செலுத்திப் புவிப் போர் வென் று, கள் நாடி வண்டு உண்ணும் மலர் நிறைந்த பழய ஊர்க்கண் வெற்றி யானை உடையவர் கைதொழச் சென்று சேர்ந்தான்,' என்பது இப்பாடலின் பொருள். 'கண்ணாடி மார்பன்' என்பதற்குப் 'புறமுதுகு காட்டாதவன் ' என்று பொருள் சால்லுதலும் அமையும்.

இவ்வாறு பலரும் புகழ, விசையை மகிழ, மக்கள் வாழ்த்தத் தன் தலை நகராகிய இராசமாபுரத்தில் புகுந்து அரண்மனையைச் சென்று சேர்ந்தான் சீவகன். அந்நகர மும் அமராபதியை ஒத்து அழகுடன் விளங்கிற்று. வந்தவர் அனைவரும் போற்றவும் ஏத்தவும் சீவகன் தன் உரிமைக்கோயிலுள் புகுந்தான்.

பின்னர் அனைவரும் அடுத்த நல்ல வேளையில் சீவக னுக்கு முடி சூட்ட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். அனைவரும் அப்பெருவிழாவைத் தம் விழாவெனவே கருதி வேண்டியவற்றை வேண்டியாங்கு விரும்பிச் செய் தனர். பல வகை வாத்தியங்கள் முழங்கின. அரசர் பலர் திறை அளந்தனர். குறித்த வேளையில் சிந்தாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/128&oldid=1484597" இலிருந்து மீள்விக்கப்பட்டது