பக்கம்:சீவகன் கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறம் வென்றது. 129


உரிமை அரசனாயினான் என்பதைக் கண்டுமனம் மகிழ்ந்து மருமகளிர் புடைசூழ மகிழ்ச்சிக் கடலுள் மகிழ்ந்திருந் தாள். மாமன் கோவிந்தனும் அவர்களோடு சில நாட்கள் தங்கினான்.

இலக்கணை திருமணம்:

கோவிந்தன் தன் மகள் இலக்கணையைத் திரிபன்றி எய்பவருக்கென்று முரசறைய, அதன்படி சீவகன் எய்தி வீழ்த்தி, இலக்கணையை மணக்க இருந்த செய்தியை முன் கண்டோம். இங்குத் தேவர் அவர்கள் மணத்தை நன்கு விளக்கிப் பாராட்டுகின்றனர். சீவகன் இன்னானென்று உலகறிந்த பின் நடைபெறும் மண மென்ற காரணத்தாலும், சீவகனது இறுதித் திருமணம் இதுவேயானமையினாலும் தேவர் இம்மணவினையை முறைப்படுத்திச் சிறந்து விளங்க வழி செய்கின்றர் போலும்! கோவிந்தன் இலக்கணெக்கும் சீவகனுக்கும் நடை பெறப்போகும் மணத்தை வள்ளுவ முதுமகன் மூலம் நாடெங்கும் முரசறைந்து அறிவித்தான்; பிற அரசர் களுக்கும் ஓலை போக்கினான். முரசறைந்த வள்ளுவ முது மகன் கூறியதாகத் தேவர் சில பாடல்கள் பாடியுள்ளார்; மன்னன் மணநாளில் மக்கள் பெறும் இன்பத்தையும் செல்வம் சிறப்பு ஆகியவற்றையும் அவ்வள்ளுவன் வாக் கின் மூலம் விளக்கிக் காட்டுகின்றார். மணச்செய்தி கேட்ட மக்கள் ஆரவாரமும், அவர்கள் நகரை அணி செய்கின்ற சிறப்பும் அடுத்துப் பேசப்படுகின்றன. மறைந்திருந்த தங்கள் அரச மைந்தனின் மணவிழாச் செய்தி கேட்ட மக்கள் வாரி வழங்கும் கொடைச் சிறப்பைக் காட்டத் தவறவில்லை தேவர். அவர்களது அலங்காரச் சிறப்பையும் அவர் மறக்கவில்லை. மணம் காண வரும் புது விருந்தினரை வரவேற்கும் செல்வ நிலையையும் பாராட்டுகின்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/130&oldid=1484608" இலிருந்து மீள்விக்கப்பட்டது