பக்கம்:சீவகன் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 சீவகன் கதை எழில் கண்ட நாம் அந்நகர் நடுவண் அரசர்க்கே க அமைந்த அப்பெருங்கோயிலைப்பற்றிக் கூறுவது எவன்? அத்துணை அழகோடு விளங்கிய நகரின் நடுவில் அரசி ருக்கை எத்தனைப் பொலிவோடு விளங்கியிருக்க வேண் டும்! இயற்கை அழகும் செயற்கை ஓவியங்களும் பிறவும் அக்கோயிலை இந்திர நகருக்கு ஒப்பாக உயர்த்தி நின் றன. அரண்மனை முற்றிலும் ஆரவாரம்; இயற்கை எழில்; செயற்கை நலன். இவற்றையெல்லாம் தொகுத் துத் தேவர், கந்துமா மணித்திரள் கடைந்து செம்பொன் நீள்சுவர்ச் சந்துபோழ்ந் தியற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால் இந்திரன் திருநகர் இருமை யோடும் இவ்வழி வந்திருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. (155) என்ற தமது சிறந்த பாட்டால் கூறி முடிக்கின்றாச். இத் த்கைய கோயிலுள் நாம் புகும் போது அதோ சீவகன் தந்தை சச்சந்தன் ஆட்சி செய்யும் காட்சி நம் கண்முன் தெரிகின்றது. மன்னனும் தேவியும் : இயற்கை எழிலும் செயற்கை அழகும் ஒரு சேரப் பொருந்திய இராசமாபுரத்து நடுவில் எழுந்து நின்ற அந்தப் பெருமாளிகையில் சச்சந்தன் என்னும் மன்னன் வீற்றிருந்தான். அவன் அரசர்க்கு அமைய வேண்டிய எல்லாப் பண்புகளையும் அமைப்புக்களையும் ஒரு சேரப் பெற்றிருந்தான். ஏமாங்கத நாட்டு மக்கள் அவனைத் தங்கள் தந்தையே போன்று போற்றி வந்தார்கள் எனின், அவனது ஆட்சிச் சிறப்பை எடுத்துச் சொல்ல வும் வேண்டுமோ! எனினும், சொல்லத்தான் வேண்டும். சச்சந்தன் ஒருவனே தருமனாகவும், வருணனாகவும், கூற்றுவனாகவும், வாமனாகவும், மன்மதனாகவும், காட்சி யளித்த சிறப்பு எண்ணி எண்ணி இன்புறத் தக்கதொன் றாகும். ஆம்! சச்சந்தன் கருணைக்கடலாய் இருந்த கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/17&oldid=1484648" இலிருந்து மீள்விக்கப்பட்டது