பக்கம்:சீவகன் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 19 வாழ விரும்புவானோ! அவனும் அவளும், தம்மையும் உலகையும் மறந்து, காதல் இன்பத்தே ஆழ்ந்துவிட்ட னர். அவன் தனது அரசையும் பிறவற்றையும் மறந் தான். சிவனும் உமையும் போன்று ஓருடம்பைப் பிரிக்க முடியாதபடி அவர்தம் வாழ்வு அமைந்தது. எதற்கும் எல்லையுண்டு. தானும் வா ழ்ந்து உலகையும் வாழ வைக்க வேண்டுவது அரசநெறி. இல்லற நெறியும் அதுவே. சச்சந்தன் தந்தையென நாட்டைக் காத்த நலத்தை விளக்கிய தேவர், அவனைக் காமவயத்தனாய்க் கடமை மறந்தவனாய் எண்ணிப் பார்க்கிறார். அதனால் வரும் துன்பமும் கண் முன் தெரிகிறது. எனவே, காதற் சுவையை மாற்றி நம்மைக் கதைக்கு அழைத்துச் செல்லு கின்றார். ஆட்சி முறை மாற்றம்! எப்போதும் காமக் களியாட்டில் மகிழ்ந்திருந்த மன்னன் சச்சந்தன், அரச காரியங்களைக் கவனிக்க முடி யாதவனானான். எவ்வளவு ஆற்றலும் அறிவும் பெற்றிருந் தும் 'காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா,' என்ற சொல்லுக்கு இலக்கானான்; ஆகவே, தனது நம்பிக்கைக் குப் பாத்திரமான கட்டியங்காரன் என்னும் அமைச்சனைத் தனியிடத்துக்கு அழைத்தான்; அவனோடு இருந்து ஆராய்ந்தான்; தனக்குப் பதில் கட்டியங்காரனே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்று அரசகாரியங்களைக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். கட்டியங் காரனோ, அது வரை அரசனுக்கு உண்மை உள்ளவு னாகவேதான் இருந்தான்; ஆகவே, அரசனது அந்த எண்ணத்தை மறுத்து, அதனால் நாட்டில் அரசனுக்கு உண்டாகும் கெட்ட பெயரையும் பிற தீங்குகளையும் எடுத்துக் காட்டினான். எனினும், சச்சந்தன் மேலும் மேலும் வற்புறுத்தவே, கட்டியங்காரன் சச்சந்தனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/20&oldid=1484416" இலிருந்து மீள்விக்கப்பட்டது