பக்கம்:சீவகன் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 சீவகன் கதை அவ்வாறு அவர்களை வருத்தும் கனவுகள் தாம் யாவை? இதோ அரசனுக்கு அரசி கூறுகின்றாள். கேட்போம்: லாகிய ஒரு மாலை அழகிய பூங்கொத்துக்களாலாகிய ஒரு அறுந்து பூமியில் வீழ்ந்தது. கொத்துக்கள் சிதறின. ஆனால், அச்சிதறலிலிருந்து ஒரு மு ளை எழுந்தது. அம் முளையைச் சுற்றி எட்டு மாலைகள் அமைந்தது போன்ற காட்சி பின் உருவாயிற்று. அந்த முளை அம்மாலைகளோடு முடிக்கு இ டனாக நன்கு வளர்ந்தது,' என்பதே அரசி உ ணர்த்திய கனவா வாகும். க்கனவினைக் கூறி, இதனால் என்ன நேருமோ என்று அஞ்சினள் அரசி. அரசனோ, அவளைத் தேற் றத் தலைப்பட்டான்; கனவு நூல்களை ஆராய்ந்தான்: அக்கனவின் பயனைக் கூறுவானாயினான். கனவு, அவ ளுக்கு மகன் பிறக்கப்போவதையும் அம்மகன் எண்மரை மணந்து செல்வத்தில் சிறக்கப் போவதையும் முன் கூட் டி யே காட்டிற்று என்றான்; எனினும், மாலை அறுந்து வீழ்ந்ததற்குப் பயன் கூறவில்லை. மேலும் அரசி வற் புறுத்தவே, அதனால் தனக்கு இ யூறு உண்டாகும். என்பதை எடுத்துக் கூறினான் மன்னன். அரசி மன ழிந்தாள்; மயங்கி வீழ்ந்தாள். வீழ்ந்தவளைத் தேற்றி அரசன் ஆறுதல் கூறி அணைத்து அமைதி பெறச் செய் தான். கனவின் நிகழ்ச்சியும் பயன்தரத் தொடங்கி விட் டது. அரசி கருவுற்றாள். ID துன்பத் தொடக்கம் : டை உள்ளே வளரும் கருவுக்கு ஒரு கெடுதலும் நேராத வகையில் அரசி தன் நலத்தைப் பாதுகாத்தாள். அது வரையில் கவலையின்றிக் களிப்பில் மகிழ்ந்திருந்த மன்னன் கன மனத்திலும் மாற்றம் உண்டாயிற்று. வின் ஒரு பகுதி பலிக்கத் தொடங்கிவிட்டது; மற்றவை யும் பலிக்கத் தொடங்கினால்...? இதை எண்ணிப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/23&oldid=1484657" இலிருந்து மீள்விக்கப்பட்டது