பக்கம்:சீவகன் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதை பிறப்பும் வளர்ச்சியும் 23 முடியவில்லை சச்சந்தனுக்கு. என்னசெய்யவேண்டும் என் எண்ணிக்கொண்டேயிருந்தான். ஒரு வேளை அதற்குள் கட்டியங்காரன் தன்னைக் கவிழ்த்துவிட்டுத் தனியாட்சி செலுத்த எண்ணிய எண்ணமும், அதுபற்றி அவன் ஆற்றும் செயலும் அரசன் காதுக்கு எட்டியிருக் கக்கூடும். எனவே, அவன் கவலை அதிகமாயிற்று. எனினும், அதை வெளிக்காட்டாது அரசி மகிழத் தான் மகிழ்ந்திருந்தான் மன்னன். இந்த மனத் தடுமாற்றத்திலே அவனுக்கு உணர் வூட்டியவன் அறிவென்னும் அமைச்சனாவன். தேவர் இரு பொருள்பட அறிவென்னும் அப்பெயரைக் கொள் கின்றார். உண்மையிலே அறிவென்னும் பெயர்கொண்ட அமைச்சன் ஒருவன் இருந்தான் என்று கொள்வதிலும், அவன் உள்ளத்தே அவனை விட்டுப் பிரியாத அறி வொளி அமைச்சனைப்போல அறிவுறுத்தியது என்று கொள்ளுதலே மிகப் பொருந்துவதாகும். எனவே, தான் உரை கூற வந்த நச்சினார்க்கினியரும் மற்ற அமைச்சர் களைக் கூறும் போது 'அமைச்சர்' என்ற சொல்லால் உறி, இங்கு அறிவென்னும் அமைச்சனைத் 'தன் அறி வென்னும் அமைச்சன்' என்று குறிப்பிடுகின்றார். கூ அறிவு மக்கள் உள்ளத்தில் அமைந்து கிடப்பது. அது எப்போதும் மக்களினத்துக்குப் பணி செய்யக் காத்துக் கிடக்கும் ஒன்று. மறந்தும் மற்றவர்க்குத் தீங்கிழைக்கா வகையில், தம்மையும் காத்து உலகையும் ஒத்து நோக்கி வாழ்வாரிடத்திலே அவ்வறிவு சிறந்து நிற்கும் என்ற உண்மையை வள்ளுவர் போன்ற அறிஞர் பலர் வற்புறுத்திச் சென்றனர். மனிதன் வாழ்வில் வழுக்கி விழுங்காலத்தில் அவனை விழாமல் காப்பது அறிவு ஒன்றேயாகும். சில காலங்களில் மனித உள் த்தே இவ்வறிவுக்கும் பிற கொடுமைகளுக்கும் போராட் டங்கள் நிகழ்வதுண்டு. அப்போராட்டங்களிலே பெரும் ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/24&oldid=1484661" இலிருந்து மீள்விக்கப்பட்டது