பக்கம்:சீவகன் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அழைத்துச் சென்று, ஓய்வு பெறச் செய்தான்; பின்பு அறுசுவை உண்டி அளித்தான்; பிறகு அந்நகரத்து அரசனாகிய கலுழவேகன் என்பானது சிறப்பையும், அவனுக்கு அழகிற்சிறந்த தத்தையென்னும் மகள் பருவமுற்றுக் காமனும் விரும்பும் கட்டழகு பெற்று விளங்குவதையும் கூறி, அவள் பிறந்த போதே கணி அவளுக்கு மண முதலிய சிறப்புக்கள் இராசமாபுரத்தே நிகழும் என்று உணர்த்தியதையும் விளக்கினான்; பிறகு அவனை அழைத் துக்கொண்டு தரன் அரச மாளிகையுள் புகுந்தான். அரசன் தனியிடத்தே இருந்தான். இவர்கள் வரவறிந்த அரசன், சீதத்தனை வரவேற்று, அரசர்க்குரிய சிறப்பினைச் செய்து, அரசர் அமரும் அழகிய பீடத்தே இருக்க வைத் தான்; பின்பு அவனோடு நெடுநாள் தொடர்பு கொண்ட வன் போன்று பல்வேறு வகையில் உசாவித் தாம் இருவரும் வேறல்லர் என்றும் விளக்கினான்.

இவற்றைக்கேட்ட சீதத்தன், கப்பல் இழந்த வருத்தமும் மறந்து மகிழ்ந்தான்; தன் பாட்டனார் அவர்தம் குலத்துக்கும் அந்த வித்தியாதர நாட்டுக்கும் உள்ள தொடர்பினை நன்கு விளக்கி, 'அங்குள்ளோர் நங்குடித் தெய்வங்காண்,' என்று கூறியதை எடுத்துக் காட்டி, அவர் அவர்களைச் சேர்ந்தவர் என்பதை உணர்த்தி வணங்கினான். அவனைத் தடுத்து நிறுத்திய மன்னன், அருகிலிருந்த தன் மனைவியை அவனுக்கு அறிமுகப்த்தினான். அவளும் அவனுக்கு முகமன் கூறினள். அருகிலே பொற்கொடியே என நின்ற காந்தருவதத்தையை நோக்கினான் வணிகன். உடனே அரசனும் அவளைப் பற்றிப் பேசலானான்: 'இதோ காண்கின்றவள் என் மகள்; காந்தருவ தத்தை த என்னும் பெயரினள் ; வீணையில் வல்லவள்; அழகிலே சிறந்தவள்; நிறைந்த நலமுடையவள். இவளை நீ உன் மகளே என எண்ணி, உன் நாட்டுக்கு அழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/53&oldid=1484087" இலிருந்து மீள்விக்கப்பட்டது