பக்கம்:சீவகன் கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 சீவகன் கதை மண நாள் வந்தது. சீதத்தன் தத்தையின் எழில் நலம் மேலும் சிறக்க வேண்டிப் பல்வகையிலே அணி செய்தான். நகரமே விழாக் கொண்டாடுவது போன்று பொலிந்து விளங்கிற்று. தத்தையின் தோழியாய் வந்த வீணாபதி, தத்தைக்குப் பல இன்மொழிகள் கூறி, அவ ளைச் சிறக்க அலங்கரித்தாள்; அவள் வீணைப் போரில் எவ்வாறு சிறக்க வேண்டுமென்பதையும் எடுத்து விளக் கினாள். குறித்த நாளும் நேரமும் வர, அவற்றை அறிந்து கணி கூற,சீதத்தனும் பல வகைத் தானங்களைச் செய் தான். தத்தையின் தோழிமார் பல்லோர் அவளது எழில் நலத்தை மேன்மேலும் விளக்கும் வகையில் பல வாறு அணி செய்து சிறப்பித்தனர். தலை முதல் அடி காறும் உறுப்புத்தோறும் அவளுக்கு அணிகளிட்டு அழகினுக்கு அழகு செய்வாராயினர் தோழியர். யாழ் வாசித்தல்: அழகு செய்யப்பட்ட தத்தையை அவள் தோழி மார்கள் அழகிய மண்டபத்துக்கு அழைத்துச் செல்வா ராயினர். அவள் ஒசிந்து செல்லும் அழகினைக் கண்ட வர், அவள் நலத்தைக் கண்ணால் பருகிக் கருத்திழந்து பல்வேறு வகையில் பாராட்டிப் பேசுவாராயினர். அவள் அழகு பற்றிப் பலரும் பேசும் சிறப்பையெல்லாம் தேவர் நயம் தோன்ற நன்கு விளக்குகின்றார். அனைவரும் பல வாறு புகழ, அணங்கனாளாகிய தத்தை உயரிய மாடத் துத் தனக்கென அமைந்த அந்த நல்லிடத்தில் சென்று அமர்ந்தாள்; அமர்ந்து வீணையைக் கையிலெடுத்துச் சுதி கூட்டி நின்றாள். அச்சுதி அளவிலே அங்கிருந்த அரச குமாரரும் பிறரும் தம்மை மறந்தனர். ஏன்? இவ் வுலகமும் மேலுலகமுங்கூட இசை வயப்பட்டன. பின்பு அவள் தோழியாகிய வீணாபதி, அனைவரும் கேட்க, 'இளை யவள் பாட அதற்கேற்ப வீரரெல்லீரும் யாழின் கூறு பாட்டை வாசிக்கத் தொடங்குக. அதற்கு இயைவீரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/57&oldid=1483798" இலிருந்து மீள்விக்கப்பட்டது