பக்கம்:சீவகன் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளை மணம் செய்விக்க முடிவு செய்து, அவளுக்கும் அதை உணர்த்தினர். (அவளோ, நடுங்கி, 'மணிம களிறு வென்றானுக்கு அடிபணி செய்வதல்லால்' (1049) வேறு ஒருவரை நினையா நிலையைக் கூறினாள்.) அதை அறிந்த த அவள் தந்தை குபேரமித்திரன் மகிழ்ந்து, நல்ல வரைக் கந்துக்கடனிடம் மணம் பேச விடுத்தான். அவர் களும் சென்று பேசி முடிவு செய்து திரும்பி வந்து,கந்துக் கடன் இசைவைக் கூறினர். அதை அறிந்த குபேர மித்திரன் மகிழ்ந்தான். நல்ல ஒரு நாளில் குணமாலை சீவகன் கைப்பிடித்து அவனொடு காதல் வாழ்வு நடத்தி வரலானாள். அவர்தம் காதல் வாழ்வையும் பலபடப் பாராட்டுகின்றார் தேவர். அவர்கள் ஒருவரை ஒருவர் சுண்ணத்தால் அறிந்தது முதல் அன்று வரை நடந்த வற்றையெல்லாம் அவர்தம் காதல் வாழ்வின் இடைப் படுத்திக் காட்டுகின்றார் தேவர். ஆம். மணவினை முடிந் தது. மறு வினை தொடர்ந்தது. யானையின் வருத்தமும் மன்னவன் சீற்றமும்: சீவகன் செயலுக்கு ஆற்றாது அடங்கிய பட்டத்து யானை தனது இடம் சேர்ந்த பிறகும் சோர்ந்து காணப் பட்டது. அதன் வாட்டத்தையும் அயர்வையும் கண் டறிந்தான் கட்டியங்காரன். அவ்வாறு என்றுமில்லா நிலையில் ஏன் அது வாட்டமுற வேண்டுமென்றான். கேட் டார் அருகிருந்தோர். அது சீவகனால் அடக்கப்பட்டமை கூறினர் சிலர். அறிந்த மன்ன னா கிய கட்டியங்காரன் வெகுண்டான்.'வணிக மகனைக் கண்டு உடன் கொணர்க!' று ஆணையிட்டான். காவலரும், தென்திசைக் கிறைவன் தூதிற் செம்மல்மேல்' (1080) செல்வாராயி னர். சென்று சிங்கத்தை நரிக்கூட்டம் வளைத்தாற்போல வளைத்துக்கொண்டனர். அவர்கள் சென்று வளைத்த போ து சீவகன் குணமாலையோடு இன்பத் துறையில் எளியனாயிருந்தான். என் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/74&oldid=1484382" இலிருந்து மீள்விக்கப்பட்டது