பக்கம்:சீவகன் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறிவானாயினான். அங்குத் தங்கிய காலத்துச் சீவகன் சென்றதும் வருவதும் நல்லதும் தீயதும் ஊழ்வினையின் பயத்தன என எண்ணிக் கடமையில் கருத்திருத்தித் தன்னை மறந்து இன்பில் திளைத்திருந்தான். அவன் நண்பனான சுதஞ்சணனும் அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புக்கள் பலவும் செய்து, அவனொடு தான் நட்புக் கொண்ட வரலாற்றையும் பிறவற்றையும் மற்றவர்களுக் குக் கூறி, அவனைப் புரந்து வந்தான்.

நாட்கள் சில கழிந்தன. சீவகன் பல நாடுகளைக் காண விழைந்தான். அவன் விழைவை அறிந்த சுதஞ் சணனும் அவனுக்குப் பற்பல நாடுகளின் வளப்பங்களைக் கூறி, அவற்றிற்குச் செல்லும் வழிகள் முதலியவற்றை யும் விளக்கி உரைத்தான்; அவ்வாறு உரைக்குங்கால் இடையில் இருந்த சாரணர் வாழ்ந்த அரணபாதம் என் னும் மலை பற்றியும் அம்மலையிடைச் சென்று அருகனை வணங்கின் பெறும் பயனைப்பற்றியும் கூறினான்; மேலும், பல்லவதேயம் என்னும் நாட்டைப் பற்றியும் கூறினான். பின்னும் அவ்வந்நாடுகளுக்குச் செல்லும் வழிகளின் இயல்புகளையும் விளக்கிக் கூறிச் சீவகன் விழைவை மேலும் தூண்டிவிட்டான் நண்பன். அவன் காட்டிய நாடுகள் பல; மலைகள் பல; ஆறுகள் பல; வழிகள் பல; அவற்றின் இயல்புகள் மிகப் பல. இப்படி அவன் உல கின் பல பாகங்களையும் விளக்கிக்கூறி, சீவகன் அவை களையெல்லாம் காண விரும்பின் சில தன்மைகளையும் வல்லமைகளையும் பெறவேண்டும் எனவும் வற்புறுத்தி னான். இறுதியில் சீவகன் மத்திம தேயத்தினை அடைந்து, அந்நாட்டு அரசனுடைய மகளை மணந்து, அங்கு வாழும் போது, அவனுடைய நண்பர்களாகிய நந்தட்டனும் பிற ரும் அவனை வந்தடைவார்கள் என்பதையும்விளக்கினான்.

தன் நண்பன் நெடுந்தொலைவு தனி வழிச்செல்வதை நினைந்தான் சுதஞ்சணன்; அவனுக்கு ஒப்பற்ற மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/80&oldid=1484571" இலிருந்து மீள்விக்கப்பட்டது