பக்கம்:சீவகன் கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கேட்க, அவன் தன் ஊரும் பெயரும் கூறி, தான் கொள் ளும் கள்ளும் ஊனுமாகிய உணவினையும் உரைத்தான். 'ஊனும் கள்ளும் அறிஞரால் விரும்பப்படாத பொருள் களல்லவா?' என் று சீவகன் அறிவுரை கூற, 'அவற்றை விட்டு உலகில் வாழ முடியாதே!' என்றான் வேடுவன். கேட்ட சீவகன், அவனுக்கு இரங்கி, 'ஊன் உண்டு தீய ராகிப் பின்பு உயர்பிறப்பற்று நரகில் உழல்வதினும், ஊனின்றி உயிர் விட்டுப் பின்பு உம்பராகி உயர்தல் நல்லது,' என்றான். அவன் வினாவின் மூலம் இந்த உண்மையை விளக்குவதைத் தேவர் வாக்காலேயேகாணலாம்:

ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ,
ஊன்தினது உடம்பை வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ?
ஊன்றிஇவ் விரண்டி னுள்ளும் உறுதிநீ உணர்த்தி 'ெடன்ன"
ஊன்தினது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி,' என்றான்.'(1235)

என்பது அவர் பாட்டு.

பின்னர் அவ்வேடனுக்கு நல்லுபதேசம் செய்து, அருகதேவன் அடிகளைப்பற்றி வாழ வேண்டிய நெறியை யும் அவனுக்கு விளக்கிச் சீவகன் மேலே தன் வழிகொடு சென்றான்; மேல் செல்லும் வழியிலே அரக்கு மாளிகை யிலே நெருப்பாலே சூழப்பட்ட தருமன் முதலாயினோர் போலக் கொடிய நெருப்பின் இடையிலே அகப்பட்ட பல யானைகளை அக்கொடிய காட்டுத் தீயிலிருந்து நல்ல மழையைப் பெய்வித்து மீட்டான்.

அரணபாதத்தை அடைதல் :

சீவகன் மேலும் சென்றுகொண்டேயிருந்தான். அவன் வழியும் வினையும் அவனை அரண்பாதத்தை அடைய வைத்தன. அந்த உயர்ந்த மலையினிடத்து அருகத் துறவியர் பலர் வாழ்ந்து வந்தனர். ஆண்டுள்ள தேவர்தம் கோயிலை வலங்கொண்டு நின்றான் சீவகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/82&oldid=1484770" இலிருந்து மீள்விக்கப்பட்டது