பக்கம்:சீவகன் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



84

         சீவகன் கதை

பதுமைக்கு உற்றதைக் காட்ட, அது கண்டு கவலாது, இவள் விடத்தால் இறக்க மாட்டாள்,' என்று கூறி, அவள் விடத்தை நீக்கினான். சீவகன் தான் விஞ்சைய னிடம் பெற்ற மந்திரத்தைத் தியானித்து நின்ற அள விலே விடம் நீங்கிப் பதுமை எழுந்தாள்; அவள் நிலை கண்ட தோழியர் அவளைத் தேற்றினர்; அருகிருந்த மற்றவர், நீக்க முடியாத கொடுவிடத்தை நீக்கிய காளை யின் நிலையை எண்ணிப் போற்றினர். பெண்டிர் கூட்டமோ, அவனது அழகினைக் கண்டு கருத்தழிந்து பலவாறு பேசியது. தனபதி, அவனை அருகிருத்தி, அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புக்கள் பலவும் செய்து, அவனது அறிவுத்திறனையும் கலைப்பண்பையும் கண்டு, 'நீர்கொள்மாக் கடலனாற்கு நிகரில்லை நிலத்தில்!' என்று புகழ்ந்தான்.

பதுமையின் திருமணம் :

      இந்நிகழ்ச்சிக்குப் பின் பதுமையின் மணத்தைக் கூற வருகின்ற ஆசிரியர் தேவர், அம்மணத்துக்கு முன் பதுமை கொண்ட காமவெந்நோய் பற்றிப் பலபடப் பாடு கின்றார். அவள் சீவகனைக் கண்டு கருத்தழிந்து இருந்த நிலையினை எல்லாம் தேவர் பாடும் தன்மை, படித்து இன் புறத் தக்கதாகும். சோலையில் இருந்து பிற மகளிரோடு அவள் ஆடுங்காலத்தும் பிற போதும் அவனை மறவாத சிந்தையளாய் எங்கும் அவனை எண்ணி எண்ணி ஏங்கி நிற்கும் நிலையும் அவளைப் பிறர் தேற்றும் நிலையும் நன்கு கூறப்பட்டுள்ளன அவள்.
    பதுமை சீவகனிடம் மனம் ஓடவிட்ட வகையிலே சீவகனும் அவள்பால் தன் கருத்திழந்தான். ஆடிடந்தோறும் சென்று, அவள் ஆடிடம் நோக்கி அழிந்தும், அவள் அழகினைக் கண்டு மாழாந்தும் நிற்பது சீவகன் வழக்கமாகிவிட்டது. அவன் அவளைத் தமிழ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/85&oldid=1484079" இலிருந்து மீள்விக்கப்பட்டது