பக்கம்:சீவகன் கதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இயக்கர் நாடு சென்ற பின்

85

மணமுறையாகிய களவு வழியில்கைக்கொளக் கருதினான். அக்கருத்தைத் தேவர்,


'தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை
மேவர் தென்தமிழ் மெய்ப்பொருள் ஆதலின்
பூவர் சோலை புகுவலென்று எண்ணினுன்.' (1328)

என அழகுபடக் கூறுகின்றார்.

அவன் எண்ணியபடியே பதுமை தங்கிய சோலையுட் சென்றான்.தனித்திருந்த பதுமையும் அவனைக்கண்டாள். இருவர் கருத்தும் முன்னமே ஒத்தமையின், அவர் தம் கூடல் எளிதாயிற்று. அவர்தம் கூடலையும், பின்பு ஆயத்தார் செயல்முறைகளையும் அழகாகத்தொகுத்துத் தமிழர்தம் களவு மணத்தினை விளக்கும் வகையில் தேவர் நன்கு இங்கே எடுத்துக் காட்டுகின்றார்.

இருவர்தம் கூட்டத்தையும் ஒருவாறு அறிந்த பதுமையின் தந்தையாகிய தனபதி,

"பூமியை யாடற் கொத்த பொறியினன் ஆத லானும் மாமகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆத லானும் பண்டுதன நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேரு மாயின் நாம் அவற்கு அழகி தாக நங்கையைக் கொடுத்தும்' என்றான்.' (1339)

உடனே அமைச்சரும் பிறரும் மணத்துக்கு வேண் டிய ஏற்பாடுகள் பலவற்றையும் செய்தனர். நகர மக்கள் நகரை அணி செய்தார்கள். மணமகனையும் மணமகளை யும் அழகுபடப் புனைந்து சிறப்புறச் செய்தார்கள். சீவகனும் பதுமையும், கணவனும் மனைவியுமாகி, அன்பு கலந்து வாழ்ந்து வந்தனர்.

சீவகன் பிரிவு :

தன்னை மறந்த இன்பத்து இவ்வாறு இரண்டு திங்கள் மூழ்கி இருந்த சீவகன், ஓர் இரவில் பதுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/86&oldid=1484153" இலிருந்து மீள்விக்கப்பட்டது