பக்கம்:சீவகன் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை


88 சீவகன் கதை

அடைய வேண்டிய முறையினையும் விளக்கிக் கூறினான்; உண்மைகளாகிய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மூன்றனையும் நன்கு விளக்கினான்.

   'மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்கள் தம்மைப் 
   பொய்வகையின்றித் தேறல் காட்சி;ஐம் பொறியும் வாட்டி உய்வகை 
   உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்கம்;  மூன்றும்  
   இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும்,' என்றான்.' (1436).                     
                                             என்று தேவர் அவன் உபதேசத்தை விளக்குகின்றார். மேலும் பலவாறு அவர்களோடு கலந்துறவாடிப் பின் அவர்கள் வழி காட்டி அனுப்ப மேல் செல்ல வேண்டிய வழியிலே சீவகன் சென்றான்.

தக்க நாடடைந்தான் :

   சில நாட்கள் நடந்து சென்று சீவகன் தக்கநாடு என்ற ஒரு நாட்டின் எல்லையைச் சார்ந்தான்; அந்நாட்டு எல்லை யில் சில நாட்கள் சென்று, பின்பு அழகிய அகழும் மதி லும் சூழ்ந்த அந்நாட்டுத் தலை நகரை அடைந்தான். அந் நகரம் கேமமாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டது. பல் வகை வளங்களும் நலங்களும் ஒருங்கே பொருந்திய உயர்ந்த நகரமாய் விளங்கிற்று அந்நகர்.
   அந்நகரத்தே வேதவாணிகன் சுபத்திரன் என்பான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு உலகெலாம் போற்றும் அழகு மிக்க கேமசரி என்ற மகள் பிறந்தாள். பிறந்த பொழுதே அவளது சாதகத்தைக் கணித்த கணி, 'இவள் எந்த ஆடவனைக் கண்டு நாணுகிறாளோ, அவனே இவள் கணவனாவன்,' என்று கூறிச் சென்றான்.
   தக்க பருவம் வந்த பின் சுபத்திரன் அவளுக்குக் கணவனைத் தேடுவதில் முன்னின்றான். சிறந்த அழகும் அறிவொழுக்கமும் நிரம்பப் பெற்றிருந்தும், கேமசரி எந்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/89&oldid=1484530" இலிருந்து மீள்விக்கப்பட்டது