பக்கம்:சீவகன் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

|கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்


ஆடவனைக் கண்டும் நாணாது இருந்தாள். சுபத்திரனோ, மேன்மேலும் வெளியூரிலிருந்து வருகின்றவர்களையெல் லாம் தன் வீட்டிற்கு வி ருந்தி னராக அழைத்துச்சென்று தன் மகளை உணவு பரிமாறச் செய்வான். ஆனால், கேம சரியோ, யாரையும் கண்டு நாணினாள் அல்லள். ஆத னால், சுபத்திரன் மிக வாடினான். கேமசரியைப் பெற்ற தாயும் செவிலியும் பிறரும் வாடி நைந்தனர்.

    நெடிது நடந்த சீவகன் கேமமாபுரத்து எல்லையிலே 

வந்து, ஓர் ஆலமரத்தின் நிழலிலே தங்கியிருந்தான். அவ்விடத்தே வந்து சேர்ந்த சுபத்திரன், சீவகனைக் கண் ணுற்று, அவனது சிறந்த அழகையும் அமைவையும் கண்டு, 'யாரோ கடவுள் போலும்!' என ஐயுற்றான்; பின் னர்த் தெளிந்தவனாகி,சீவகன் அருகில் சென்று, அவ னைத் தன்னுடன் வருமாறு அழைத்துத் தேரில் ஏற்றிக் கொண்டு தன் மனை சென்றடைந்தான். இவர்கள் அவ் வாறு வீட்டுக்குச் சென்ற அதே வேளையில் அங்கு அழ குக் கொடியாய் இருந்த அணங்கு கேமசரி, அருகக் கட வுளைத் துதித்து அழகாகப் பாடித் தன் குறை தீர்க்க வேண்டுமென் று வழிபட்டுக்கொண்டிருந்தாள். அவளது வழிபாட்டைத் தேவர் தம் வழிபாட்டு உள்ளத்தால் உருக்கமாகக் காட்டுகின்றார்:

       'பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை
       நாத்தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே;
       வீட்டுலகம் நண்ணார் வினாக்கள் வர்த்தக 

ஆறலைப்ப

       ஓட்டிடுப; எண்குணனும் கோட்பட்டு உயிராவே.' (1469)
                                                    

என்பது அவர் பாடல்களுள் ஒன்று. அவள் கடவுளை வேண்டும் நிலை கண்டு அவள் தாயாகிய நிப்புதியும் பிற ரும், 'ஒரு வேளை இன்று இறைவன் இவளுக்குத் தக்க கணவனைக் கொண்டு வருவானோ!' என எண்ணினர். அவர்கள் அவ்வாறு எண்ணிய அந்த வேளையிலே சுபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/90&oldid=1484475" இலிருந்து மீள்விக்கப்பட்டது