பக்கம்:சீவகன் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும் 91 இல்லுறை தெய்வம் பலவாறு இரங்கிக் கூறிற்று. அவள் தாயாகிய நிப்புதி, அவள் அருகிருந்து பல வகையில் அவளுக்கு ஆறுதல் கூறினாள்: ‘மன்னுநீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை; இன்பம் மின்னின்ஒத் திறக்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும்; இன்னிசை இரங்கு நல்யாழ் ல இசை இளியினும் இனிய சொல்லாய்! அன்னதால் வினையின் ஆக்கம்; அழுங்குவது என்னை?' என்றாள்.' (1537) அவள் தேற்றம் பற்றித் தேவர் பாடிய பாடல்களுள் ஒன்று இது. அன்னையும் மற்றவரும் தேற்றக் கேமசரி, 'சீவகனைக் கூடுங்காலம் மீளவும் உள தாங்கொல்! அஃது என்று வருங்கொல்!' என்று எண்ணி எண்ணித் தேறி ஆறுதல் பெற்றிருந்தாள். அறம் உணர்த்தினான்: தனியே சென்ற சீவகன், வழியெலாம் கடந்து சென்றுகொண்டேயிருந்தான்; வழியினிடை வந்தான் ஒருவனை நிறுத்தித் தான் அணிந்திருந்த அணிகலன் களையெல்லாம் கழற்றித் தந்தான்; மேலும், அவனுக்கு உலகில் ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய உறுதியையும் உண்மைச் சமய நெறியையும் பலவாறு எடுத்துணர்த்தி னான்; தூய துறவினால் பெறப்படும் மேலான பயன்கள் இவை இவையென எடுத்துக்காட்டினான். 'கேமசரியோடு தன்னை மறந்த காதல் வாழ்வில் திளைத்த சீவகனா இத் துணைப் பெரிய ஞானாசிரியன் ஆனான்!' என்று எண்ணும் படி, சீவகனது பற்றற்ற உயர்ந்த பண்பாட்டைத் தேவர் எடுத்துக் காட்டுகின்றார். உள்ளத்துறவால் உலகைப் பெற்ற உத்தமராகிய தேவர், மக்கள் கள்ளம் பொருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/92&oldid=1483860" இலிருந்து மீள்விக்கப்பட்டது